Vietnam veterans

வியட்நாம் போரில் சண்டையிட்ட அமெரிக்க வீரர்கள்

தமிழ் விளக்கம்

அமெரிக்கா முன்னெடுத்து நடத்தி, 1975 ஆம் ஆண்டு முடிந்த வியட்நாம் போரில் பங்குபெற்ற அமெரிக்க இராணுவ வீரர்கள், போர் முடிந்த பின்பு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சமூகப்பணியாளர்கள், மனநலப் பணியாளர்கள், ஆலோசனை சொல்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில் வழிகாட்டிகள் உதவினாலும், வியட்நாமியப் போரில் வெற்றிபெற முடியாமல் போனதால் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட விரக்தி, போரினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இராணுவீர்களின் மறுவாழ்விற்கென்று அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமை, ஏஜெண்டு ஆரஞ்சு என்ற புற்றுநோய் உருவாக்கக்கூடிய இரசாயனங்களை பயன்படுத்தியதால் இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு போன்ற பல காரணங்கள் வியட்நாம் வீரர்களின் மறுவாழ்வுப் பணியை திறம்படச் செய்யவிடாமல் தடுத்தது.
பார்க்க: posttraumatic stress disorder (PTSD) - அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தச் சீர்கேடு, ஊறுபாட்டை அடுத்த உளவழுத்தக் கோளாறு - வழக்கமான மனித அனுபவங்களைக் கடந்து, அசாதாரண நிகழ்வுகளால் ஏற்படும் உளவியல் தாக்கம். விபத்து, இயற்கைப் பேரிடர்கள், இராணுவத் தாக்குதல், கற்பழிப்பு, தாக்குதலுக்குள்ளாதல் போன்ற நிகழ்ச்சிகளை மன அழுத்ததைத் தரும் அசாதாரணமான நிகழ்வுகள் எனலாம். இயல்பாக மனிதர்களுக்கு மன அழுத்ததைத் தரும் தாம்பத்தியப் பிரச்சனைகள், மரணம், நோய் போன்றவை அதிர்ச்சியான சம்பவங்களாகக் கருதப்படுவதில்லை. அதிர்ச்சிக்குரிய சம்பவங்களை எதிர்கொண்டவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாமை, உணர்வு மழுங்கல், சுரணை இழத்தல், அதீத எச்சரிக்கை உணர்வு, மிரட்சி, துயர் தரும் நினைவுகள், தூக்கத் தொந்தரவுகள், பயங்கரக் கனவுகள் போன்றவை அதிர்ச்சிக்குப் பின்னான விளைவுகளாகும்.

English

Military personnel who served during the Vietnam conflict, which ended in 1975. Many American veterans of this war have experienced difficulties trying to readjust to civilian life and have needed help from social workers, vocational counselors, physicians, and other professionals. These difficulties are related to such factors as the lack of popular support for the war and its participants; "losing" the war; poor postwar economic conditions supposedly resulting in reduced veterans' services; the widespread use of drugs; and the use of defoliants such as Agent Orange, which may be carcinogenic. See also posttraumatic stress disorder (PTSD).