viruses
தீநுண்மம், நச்சுயிரி, நச்சுநுண்மம்
தமிழ் விளக்கம்
வைரசு என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் எனச் சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (inert) இருக்கும். ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மையுடையது. பொதுவாக அனைத்துத் தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு மரபணுப் பொருளையும் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ) அதனைச் சுற்றிப் புரத உறையும் (coat protein), ஒரு கூடும் (capsid protein) உள்ளதாக இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (Spikes) போன்ற அமைப்பும் உள்ளன. இவை கிளைக்கோ புரதங்களாக ஆக்கப்பட்டிருக்கும். தீநுண்மங்கள் பூச்சிகளாலும் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட நோய்க்காவி என அழைக்கப்படும்), காற்று, நீர், குருதிப் பரிமாற்றம் மூலம் பரவும். ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடல் உறவு, தூய்மை இல்லாத ஊசிகள் மூலமும் பரவுகிறது. வெறி நாய்க்கடி நோய் (ராபீசு), நாய், பூனைகள், சில நேரங்களில் எலிகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது. அண்மையில் வவ்வால்கள் மூலமும் ராபீசு பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2. தீ நுண்மம் அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், அல்லது வைரசு (virus) என்பது உயிரினங்களில் நோயை உண்டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும். தீ நுண்மங்கள் கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி வகையைச் சேர்ந்தவை. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல நுண்ணுறுப்புக் கட்டமைப்பு இல்லாததால், அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அந்த உயிரணுக்களைத் தம் கட்டுக்குள் கொண்டுவந்து தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். வைரசு என்ற சொல் மெய்க்கருவுயிரியைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். நிலைக்கருவிலிகளைத் தாக்கும் துகள்களை நுண்ணுயிர் தின்னி என்று அழைக்கிறோம்.

English
Tiny, simple spherical or rodshaped organisms (or bits of nucleic acid wrapped in coats of protein) that cause mild and serious diseases in plants, animals, and humans; such diseases include acquired immune deficiency syndrome (AIDS), some forms of cancer, colds, flu, poliomyelitis, and hepatitis. Viruses reproduce only within the cells of other organisms. Antibiotics that are effective in fighting bacterial diseases have little use in the fight against viral diseases.