Vivas, Juan Luis (1492-1540)
விவாஸ் ஜூவான் லூயிஸ் (1492-1540)
தமிழ் விளக்கம்
விவாஸ் ஜூவான் லூயிஸ் (1492-1540) - ஏழை மக்களுக்காக இரந்து பேசிய ஸ்பானிஷ் தேசத்து மனித நேயப் போராளி. இவருடைய மருத்துவக் குறிப்புகள், ஆத்மாவைப் பற்றிய கருத்துக்கள், மனித உணர்வுகள், நினைவுத் திறன், கற்றலைப் பற்றிய கண்ணோட்டம் போன்றவை இவரை உளவியலாளர் போன்றே உணரவைத்தது. இவர் 1525 ஆம் ஆண்டு வாக்கில் இவர் எழுதிய (De Subventione Pauperum - On Assistance To The Poor) ஏழைகளுக்கு உதவுதல் என்ற புத்தகம், பிச்சையெடுத்தலைத் தடுப்பது, ஏழை மாணவர்களுக்கான பள்ளிகள், கட்டாய உழைப்பு, ஏழைகளுக்கான மையப்படுத்தப்பட்ட நிவாரண நிதி போன்ற முற்போக்கு கருத்துக்களைப் பரிந்துரை செய்திருந்தது.
English
Spanish humanist who advocated for poor people and in 1525 published the influential treatise on poor relief De Subventione Pauperum. He recommended the centralization of relief funds, forced labor, schools for poor children, and the prohibition of begging.