Vocational Rehabilitation, Office of
தொழில் சார்ந்த மறுவாழ்வு, புனர்வாழ்வுக்கான அலுவலகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க நடுவனரசின் கட்டளைக்கிணங்க, அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஊனமுற்றவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத் தொழிலைத் தெரிவு செய்ய ஆலோசனை, இலவசப் பயிற்சி பெற்று வேலையிலமர்த்தப்பட ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகள். சில மாநிலங்களில் சமூக சேவைத் துறையினராலும், வேறு மாநிலங்களில் தொழிலாளர் துறையினராலும் நிர்வகிக்கப்படுகின்றது.
English
Federally mandated, locally administered programs in every state to provide free vocational counseling and referral to training programs or job placement services for people with disabilities. In some states the programs are administered by the Department of Social Services, whereas in other states the Department of Labor is in charge.