voluntary associations

தன்னார்வ அமைப்புகள்

தமிழ் விளக்கம்

மருத்துவப் பராமரிப்பு, சமூக சேவைகள் மற்றும் பிற சேவைகளில் அரசு செய்யாத சேவைகளை அல்லது அரசு செய்யும் சேவைகளின் பற்றாக்குறையை ஈடுகட்ட தனிநபர்கள் முயற்சியுடனும், தனிநபர்கள் நிதியுதவியுடனும் ஏற்படுத்தப்பட்டு நடத்தப்படும் அமைப்புகள். தன்னார்வ அமைப்புகள் சில குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளை வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தும். எடுத்துக்காட்டாக அமெரிக்க புற்றுநோய்க் கழகம், (American Cancer Society), அமெரிக்க இருதயக் (ஆரோக்கிய) கழகம் (American Heart Association), தேசிய சிறுநீரக அறக்கட்டளை (National Kidney Foundation), Big borthers & Sisters of America என்ற (பெற்றோர் பராமரிப்பற்ற) இளவயது ஆண் மற்றும் பெண்களுக்கு வழிகாட்டும் தன்னார்வ அமைப்பு, கத்தோலிக்க மற்றும் லுத்ரன் திருச்சபை தொடர்புடைய தொண்டு நிறுவனங்களின் பணிகளை ஒருங்கிணைக்க உருவான அமெரிக்கா தழுவிய கத்தோலிக்க மற்றும் லுத்ரன் அறக்கட்டளை (Catholic Charities USA and Lutheran Social Services), சமுதாய சேவைகளுக்கு, தன்னார்வலர்களிடமிருந்து ஒருங்கிணைந்த முறையில் நிதி திரட்டுவதற்காக உள்ளூர் அளவில் செயல்படும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தேசிய / பிராந்திய கூட்டமைப்பு, (ஒன்றிணைக்கப்பட்ட செயல்பாடு / ஒன்றிணைக்கப்பட்ட வழிமுறை / ஒன்றிணைக்கப்பட்ட உபாயம் -United Way) போன்றவற்றை சொல்லலாம்
பார்க்க: non govt organaizations - அரசு சார்பற்ற நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் - பலபெயர்களில், பலநோக்கங்களில், பலவழிமுறைகளைக் கையாண்டு சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நிறுவனங்கள், அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் அறநிறுவனங்கள் என்றும், பின்னர் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், இலாபநோக்கற்ற நிறுவனங்கள், குடிமைச் சமுதாய அமைப்புகள் (civil society organizations), சமூக சேவை முனைவகம் (social enterprise) என்று பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சபையும், அதைச் சார்ந்த நிறுவனங்களும் பெரும்பாலும் அரசுத்துறைகளுடனே இணைந்து செயல்படும். அரசுத்துறை சாராத நிறுவனங்களை தங்களின் ஆலோசனைகளில் பங்கெடுக்க அழைத்த போது, அதைக் குறிக்க அரசு சார நிறுவனங்கள் என்று அழைக்கத்தொடங்க அதுவே இந் நிறுவனங்களின் தன்மையைப் பிரதிபலித்ததால், அந்தப் பெயரே நிலைபெற்றுவிட்டது. எப்படிப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிறிதும் பெரிதுமான இந்நிறுவனங்களின் நோக்கம் மானுட நலனே. கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள், பெண்கள், சிறுவர், முதியோர் நலன், சமூக மாற்றம், சமூக சமத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர் நலன் என்று பல தளங்களில் இந்நிறுவனங்கள் செயல்படுகிறது. சில நிறுவனங்கள் தேசிய அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு எதிர்ப்பு முயற்சிகளையும் செய்கிறது. பலநாடுகளிலும், ஐக்கிய நாட்டு அமைப்புகளிலும் இந்நிறுவனங்களுக்கு ஆலோசகர் அந்தஸ்து அளிகிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள், அரசுத்தலையீடின்றி, தங்கள் நோக்கங்களை வரையறை செய்துகொண்டு, அதற்கான ஆதாரங்களைத் தாங்களாகவே திரட்டிக்கொண்டு செயல்படும் நிறுவனங்களாகும்

English

Organizations whose funding comes from private contributions and whose goals are to provide health, social, and other services to the disadvantaged outside government auspices. Voluntary associations tend to specialize in particular needs and services. These include health and hospital support (for example, the American Cancer Society, the American Heart Association, and the National Kidney Foundation), help for specific groups (for example, Big Brothers/Big Sisters of America and the National Shut-in Society), church-related organizations (for example, Catholic Charities USA and Lutheran Social Services), and community fund-raising groups (for example, the United Way).