volunteer
தன்னார்வலர்
தமிழ் விளக்கம்
தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் பிறருக்கு உதவவோ அல்லது சமுதாயத நன்மையின் பொருட்டு ஊதியம் எதிர்பாராமல் பணிபுரிபவர் / தொண்டு செய்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரசு சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றித் தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்விதப் பிரதிபலன்களையும் (கொடுப்பனவுகள்) பெறமாட்டார்கள்.
மருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புக்களுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத்தேவை தொடர்ச்சியானதாக இல்லாமல், ஒரு தடவையோ, ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும். இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

English
One who offers to serve, of his or her own free will, usually without financial compensation. See also volunteerism.