volunteerism
தன்னார்வக் கொள்கை
தமிழ் விளக்கம்
அரசு முயற்சிகளுக்கு வெளியே, அரசு (உதவி) சாராமல், சமுதாய மற்றும் மானுட சேவைகளுக்கு, ஊதியம் (பொருள் ரீதியான பிரதிபலன்) எதிர்பார்க்காத தன்னார்வத் தொண்டர்களை அணிதிரட்டுவதைத் தன்னார்வக் கொள்கை எனலாம். இந்தத் தன்னார்வக் கோட்பாடு சுய உதவி, பரஸ்பர உதவிக் குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் மனிதநேயமுள்ளவர்களின் சித்தாந்தமாகும். தன்னார்வலர்களைத் திறனுடன் பயன்படுத்த வேண்டி அமெரிக்க அரசு, மூத்தோர் தொண்டரணி (Senior Corps), அமெரிக்கத் தொண்டரணி (AmeriCorps), அமெரிக்க சேவைக்கான தன்னார்வலர்கள் Volunteers in Service to America [VISTA]) போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய சமுதாய சேவைகளுக்கான நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர தன்னார்வ அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு மையம், சுய உதவிக்கான தேசியத் தகவல் மையம், சுய உதவிக்கான தேசிய உதவி மையம், தன்னார்வப் பணிகளுக்கான தேசிய மையம் போன்ற அமைப்புகளின் மூலம் தன்னார்வப் பணியை ஊக்குவிப்பதை அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது.
பார்க்க: Senior corps - மூத்தோர் தொண்டரணி - அமெரிக்காவின் தேசிய சமுதாய சேவை நிறுவனம், அமெரிக்கக் கலாச்சாரம், சேவை மற்றும் குடிமைப் பொறுப்புடமையை வலுப்படுத்த, வருடத்திற்கு 50 இலட்சம் மனித நாட்களுக்கு இணையான தன்னார்வத் தொண்டர்களின் சேவையை, அதற்கான நிதி ஆதாரங்களை, அமெரிக்கத் தொண்டரணி (AmeriCorps), அமெரிக்காவிற்கான கற்றலும் சேவையும் (Learn and Serve America), மூத்தோர் தொண்டரணி (Senior Corps) போன்ற பல்வேறு திட்டங்களின் மூலமாகத் திரட்டுகிறது. அதில் மூத்தோர் தொண்டரணி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அதில் ஓய்வுபெற்ற மூத்தோர் தன்னார்வ சேவை (அனுபவ முதிர்ச்சியால் வழிநடத்தும் திட்டம் - Retired and Senior Volunteer Program - RSVP), மூத்தோர் தோழமைத் திட்டம் (மூத்த குடிமக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது Senior Companion Program - SCP), வளர்ப்பு (தாத்தா பாட்டி) மூதாதையர் (முதியோர் மூலம் குழந்தைகளைப் பராமரிப்பது - Foster Grandparents program) போன்ற மூன்று திட்டங்கள் முக்கியமானது.
Americorps - அமெரிக்கத் தொண்டரணி - ஏழைகள் மற்றும் பின்தங்கிய சமுதாயங்களுக்குச் சேவைபுரிய கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, 1994 இல் ஏற்படுத்தப்பட்ட தொண்டர் படை. இத்தொண்டர்களுக்குப் பயிற்சியளித்து கிராம மற்றும் நகர்ப்புறங்களில், அமெரிக்க இந்தியர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட இலக்கு மக்களுக்கு மருத்துவ சேவை, கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலத்திட்ட சேவைகள் வழங்கப்பட்டது. இத்தொண்டர்களின் சேவைக்குப் பிரதியுபகாரமாக கல்வியும் பயிற்சியும் பிற சலுகைகளும் வழங்கப்பட்டது.

English
The mobilization and use of unpaid individuals and groups to provide human services outside the auspices of government agencies. This term, or "voluntarism," also pertains to the ideologies of self-help groups, mutual-aid groups, self-help organizations, and philanthropy. The U.S. government maintains the Corporation for National and Community Service (which includes the Senior Corps, AmeriCorps, and Volunteers in Service to America [VISTA]) to help coordinate some of these efforts throughout the nation. Other organizations that serve the same purpose include the National Self-Help Clearinghouse, the National Self-Help Resource Center, and the National Center for Voluntary Action, which promoted the national network of local Voluntary Action Centers.