Volunteers in Service to America (VISTA)
அமெரிக்க சேவைக்கான தன்னார்வலர்கள்
தமிழ் விளக்கம்
Volunteers in Service to America (VISTA) - பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாகப் பின்தங்கிய அமெரிக்க கிராம மற்றும் நகர்ப்புறங்களில், லின்டன் பி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த போது கொண்டுவரப்பட்ட, மேன்மைமிக்க சமுதாயம் (Great Society) அமைக்க, 1964 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பொருளாதார வாய்ப்பு சட்டத்தின் ஒரு திட்டமாக அமெரிக்க சேவைக்கான தன்னார்வலர்கள் திட்டம் உருவானது. VISTA என்றழைக்கப்பட்ட இத்திட்டம், 1971 இல் அமெரிக்காவின் முக்கியமான செயல்திட்டமாக வடிவெடுத்தது. பின் அமெரிக்கத் தொண்டரணியுடன் இணைக்கப்பட்டு, 1995 இல் தேசிய சமுதாய சேவைகளுக்கான நிறுவன நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. சமுதாய அமைதிப் பணியாளர் என்றழைக்கப்பட்ட இவர்கள் வறுமை ஒழிப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இத் தொண்டர் படையினர் 12 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றுவர். அதற்காக வாழ்க்கை ஊதியம், மருத்துவப் பாதுகாப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்பில் உதவிகளும் பெறுவர் அப்படித் தேவையில்லாதவர்களுக்கு அதற்கினையான உதவித் தொகை பணமாகக் கொடுக்கப்பட்டது.
பார்க்க: Economic Opportunity Act of 1964 - பொருளாதார வாய்ப்புச் சட்டம் - லின்டன் பி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த போது கொண்டுவரப்பட்ட சட்டம். இச்சட்டத்தின்படி பொருளாதார வாய்ப்பிற்கான அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டு அதன் மூலம் மேன்மைமிக்க சமுதாயம் (Great Society) அமைக்க பல திட்டங்கள் தீட்டப்பட்டன. வறுமைக்கு எதிரான யுத்தம் (War on Poverty), அமெரிக்காவிற்கான தொண்டர்கள் (Volunteers in Service to America (VISTA), ஆற்றலோடு தொடங்குதல் (Head Start), வேலைவாய்ப்பிற்கான தனித்துறை, குடியிருப்புகளுக்கான தொண்டரணி, சமுதாயச் செயல்திட்டம் போன்று பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

English
The program established as part of the Economic Opportunity Act of 1964 and designed to bring volunteers into urban and rural areas of the United States that face economic and cultural deprivation. VISTA became part of the U.S. ACTION program in 1971. In 1995 VISTA, along with Americorps, was placed administratively under the Corporation for National and Community Service. Often called the "Domestic Peace Corps," the workers are assigned to antipoverty (capacity building) activities in communities. AmeriCorps* Vista volunteers serve for 12 months and receive a living allowance and health and child care (or a cash stipend at the end of service).