voter registration drives
வாக்காளர் பதிவு முகாம்கள்
தமிழ் விளக்கம்
ஒரு சமுதாயத்தினதோ அல்லது ஒரு குழுவினதோ அதிகாரத்தை, செல்வாக்கை அதிகரிக்க அவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய வைத்து, அவர்களுக்கான பல்வேறு தேர்தல்களில் வாக்களிக்கத் தூண்டுவதற்காக சமூகப்பணியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் கையாளும் உத்தி.
human SERVE - வாக்காளர் பதிவு மற்றும் கல்விக்கான தொண்டர்கள் - ரிச்சர்ட் க்ளோவார்டு மற்றும் பிரான்சிஸ் பாக்ஸ் பீவன் என்பவர்களால், 1983 ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவை ஊக்கப்படுத்தவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம். சில இனக்குழுக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதில் இருந்த தடைகளைச் சட்டத்தின் மூலமும், அரசியல் அழுத்தம் கொடுத்தும் அகற்றியதில் இந்த நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.
National Voter Registration Act (NVRA) - தேசிய வாக்காளர் பதிவுச் சட்டம் - 1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின்படி அமெரிக்கக் குடிமக்கள், ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணபிக்கும் போதும், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு சேவைகளைப் பெருமிடங்களிலும் வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென்று வலியுறுத்திய சட்டம். இது human SERVE என்ற நிறுவனத்தின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது.

English
A strategy used by social activists, community organizers, and other social workers to strengthen the power and influence of a community or segment of the population by encouraging and facilitating the enrollment of eligible citizens to permit them to vote in subsequent elections. See also human SERVE and National Voter Registration Act (NVRA).