voucher system
சான்றுச்சீட்டு முறை, சான்றாவணம்
தமிழ் விளக்கம்
திறந்த வெளிச் சந்தையில் ஒருவருடைய மருத்துவத் தேவைகள், சமூகத் தேவைகள் மற்றும் பிற தேவைகளைப் பெறுவதற்காக வழங்கப்படும் மானியம் அல்லது சலுகைகள். இந்த முறையில் ஏழை என்று அறியப்பட்ட மக்களுக்கு, குறிப்பிட்ட பண மதிப்புள்ள பொருளையோ (உணவுப் பொருள்) அல்லது சேவையையோ பெற்றுக்கொள்ள உதவும் / வழங்கப்படும் மாற்றிக்கொள்ளத்தக்க அடையாள அட்டைகள சான்றுச் சீட்டு முறை எனலாம். இந்த சான்றுச் சீட்டு முறையில் மிகவும் பிரபலமானவை உணவுக் கூப்பன்கள், கல்விக் கட்டணக் கூப்பன்கள் வீட்டு வாடகைக்கான கூப்பன்கள் போன்றவையாகும்.
பார்க்க: Food Stamp program - உணவு அடையாளச் சீட்டு, படிவம், (உணவுப் பொருட்களை வாங்க) பணமோ பணயுதவியோ பெறுவதற்காக கொடுக்கப்படும் படிவம் - வறுமையில் வாழ்பவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உணவிற்கான அடையாள அட்டைகள் / கூப்பன்கள். வரையறுக்கப்பட்ட பண மதிப்புள்ள அட்டைகளைக் கொண்டு, இந்த அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் எந்தக் கடையிலும் உணவு, விதைகள், செடிகள், மற்றும் சமைத்த உணவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டைகளைக் கொண்டு ஆல்கஹால், புகையிலைப் பொருட்களையோ அல்லது அரசால் பட்டியிலிடப்பட்ட / தடை செய்யப்பட்ட பொருட்களையோ வாங்கமுடியாது. அமெரிக்க அரசின் வேளாமைத் துறையினரால், 1964 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டம், அமெரிக்க மாநில அரசுகளின் சமூக நலத் துறைகளால் நிர்வகிக்கப்படுகிறது.

English
A method of subsidizing a person's social services, health care, and other needs on the open market. Typically, in this system a poor person is given vouchers, often in the form of redeemable stamps or coupons, worth a certain amount of money as long as they are spent on a specified service or product. Among the most common of these systems are food stamps, tuition grants, and housing subsidy checks.