vulnerable populations

எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய / இடர்ப்பாட்டிற்கு உள்ளாகக் கூடிய மக்கள்

தமிழ் விளக்கம்

சமூகத்தின் எல்லாப் பிரிவினரைவிட சமூகச் சூழலாலோ, ஆரோக்கியச் சீர்கேட்டாலோ, சுற்றுச் சூழல் சீர்கேட்டாலோ எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் தன்மை படைத்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மக்கட் கூட்டம். எடுத்துக்காட்டாக, வளர்ச்சி குன்றிய நாடுகளிலுள்ள மக்கள் சத்துக் குறைவால் எளிதில் பாதிக்கப்படவும், கருப்பினத்தவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படவுமான சந்தர்ப்பங்கள் அதிகம். ஆபத்தில் உள்ள மக்களைக் குறிக்க உதவும் சொல்லாட்சி.

English

Those individuals or groups who have a greater probability of being harmed by specific social, environmental, or health problems than the population as a whole. For example, black men are a vulnerable population at risk for hypertension, and citizens of underdeveloped nations are more vulnerable to malnutrition. This is a synonym for at-risk population.