WAIS test
வெஸ்லெரின் பெரியவர்களுக்கான நுண்மதி ஈவு / நுண்ணறிவு ஈவுச் சோதனை, Wechsler Adult Intelligence Scale என்பதன் சுருக்கமே WAIS Test எனப்படுவது
தமிழ் விளக்கம்
நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல், தொடர்பு காணும் ஆற்றல், சூழ்நிலைப் பொருத்தப்பாடு, கருத்தியல் சிந்தனைத் திறன் போன்ற ஆற்றல்கள் அல்லது திறன்களின் தொகுப்பாகும். நுண்ணறிவின் அளவை உளவியல் வல்லுநர்கள் நுண்ணறிவு ஈவு என்னும் ஒர் அளவையினால் குறிப்பிடுகின்றனர். நுண்ணறிவு ஈவு என்பது ஒருவரின் மூளை, அவரின் வயதிற்கேற்ப எவ்வாறு செயல்ல்படுகிறது என்று அறிய உதவும் நுட்பமாகும். நுண்ணறிவு எண், அல்லது IQ என்பது, நுண்ணறிவை மதிப்பிடுவதெற்கென வடிவமைக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்ட சோதனைகளின் மூலம் பெறப்படும் மதிப்பாகும். ஜெர்மன் சொல்லான Intelligenz-Quotient என்பதிலிருந்து வந்த 'IQ' எனும் சொல், முதன்முதலில் ஜெர்மானிய உளவியலாளர் வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் 1912 இல் பயன்படுத்தப்பட்டது. நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நுண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.
இந்த நுண்ணறிவுச் சோதனைகளின் மூலம், சோதிக்கப்படும் நபரின் திறன்களை அறிந்துகொள்ள முடியும். ஒரு செயலின் அல்லது எண்ணத்தின் மறைபொருளை உணரும்திறன் (understanding abstract concepts), ஒன்றிற்கு ஒன்று கொண்டிருக்கும் தொடர்புகளை உணரும் திறன் (grasp relationships), தானிருக்கும் சூழ்நிலை பற்றித் தகவலறியும் திறன் (acquire information about the relevant environment), புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறன் (adapt to novel situations) போன்ற திறன்களை அறிந்து கொள்ளமுடியும். சராசரியான நுண்ணறிவு ஈவு என்பது 70-130 வரை ஆகும். இதில் 90 -110 மதிப்பெண்கள் பெற்றவர்கள் சராசரி நுண்ணறிவு கொண்டவர்கள், 70 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெறுபவர்கள் சிறப்புக்கல்வி தேவைப்படுபவர்கள். இந்தச் சோதனைகளின் உபமதிப்பு சோதிக்கப்படுபவரின் மனநலத்தைப் பிரதிபலிப்பதால், உளவியல் மதிப்பீடுகளுக்கும் இச்சோதனை பயன்படுகிறது.
IQ மதிப்புகள் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன. கல்வி நிலையங்களில் மாணவர்களின் திறனறியவும், தேவையறியவும், பொது மக்களின் மாறிவரும் அறிவுத் திறனறியவும், பொதுமக்களின் அறிவுத் திறன் நுகர்வு, அரசியல் ஆர்வம், சமய நம்பிக்கைகள் போன்றவற்றோடு கொண்டிருக்கும் தொடர்பறியவும், பணியாளர் தேர்விலும், பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகளிலும் இது பயன்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பலநாட்டு மக்களின் சராசரி IQ மதிப்புகள் பத்தாண்டுகளுக்கு மூன்று புள்ளிகள் என்ற சராசரி வீதத்தில் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. Wechsler Adult Intelligence Scale என்பதன் சுருக்கமே WAIS Test எனப்படுவது. நுண்ணறிவுச் சோதனைகளில் மிகப் பிரபலமானதும், பலரால் பயன்படுத்தப்படுவதும் வெஸ்லெர் வடிவமைத்த பெரியவர்களுக்கான நுண்ணறிவு ஈவும், குழந்தைகளுக்கான நுண்ணறிவு ஈவுமாகும் (Wechsler Adult Intelligence Scale and the WIS (Wechsler Intelligence Scale for Children).

English
See intelligence quotient (IQ).