WAN

வைட் ஏரியா நெட்வொர்க்

தமிழ் விளக்கம்

நெட்வொர்க் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களையோ அல்லது கருவிகளையோ ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்புப் பாதை வழியாக இணைப்பதாகும். பலவகை நெட்வொர்க் இருந்தாலும் LAN, WAN என்பவையே அடிப்படையாக உள்ள நெட்வொர்க்குகளாகும். நெட்வொர்க் இணைப்பு அமையப் பெற்றிருக்கும் புவியமமைப்பு தொலைவினைப் பொருத்து LAN (Local Area Network) மற்றும் WAN (Wide Area Network) என்று பிரிக்கப்படுகிறது. LAN என்பது ஒரு எளிமையான கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆகும். இவ்வகை நெட்வொர்குகள் சிறிய பகுதியில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைக்கப் பயன்படுகிறது. இந்த முறையில் பெரும்பாலும் ஒரு கட்டிடத்திற்குள் அல்லது ஒரு அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைக்கலாம். LAN அமைப்பில் Printer, Server போன்று பல கருவிகளை மற்றும் application களைப் பகிர்ந்து பயன்படுத்த முடியும். LAN நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைப்பதற்கு ethernet cable, network adapter, hub, switch, router போன்றவைகள் பயன்படுகின்றன. WAN என்பது ஒரு பெரிய புவிபரப்பில் உள்ள கம்ப்யூட்டர்களை இணைக்கும் முறையாகும். இந்த முறை மூலம் இரண்டு வெவ்வேறு நாடுகளில் இருக்கும் ஊர்களில் LAN லினை நிர்வாகம் செய்வதற்கு, எளிமையாக இருப்பதற்காக கம்ப்யூட்டர் இணைப்புகளைக் குழுக்களாகப் பிரித்து அமைத்துக் கொள்ளலாம். இந்தக் குழுக்கள் workgroup என்று அழைக்கப்படுகிறது. பல குழுக்கள் இருந்தால் இணைப்பதற்கு router என்ற கருவி பயன்படுத்தப்படும்.

English

Wide-area network, a connection of mainframe and personal computers located across the world. See also LAN.