War on Poverty

வறுமை மீதான யுத்தம், வறுமைக்கு எதிரான யுத்தம்

தமிழ் விளக்கம்

லின்டன் பி ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த போது, அமெரிக்க மக்களின் பொருளாதார மேம்பாட்டின் மூலமும், அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கச் செய்வதன் மூலமும், மேன்மைமிக்க அமெரிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப, வறுமைக்கு எதிரான போரைத் துவக்கினார். வறுமைக்கு எதிரான இப்போர் பல திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1964 இல் கொண்டுவரப்பட்ட பொருளாதார வாய்ப்புகளுக்கான சட்டம், 1935 இல் இயற்றப்பட்ட சமூகப்பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்து, அதுகாறும் சமூகப்பாதுகாப்புப் பலன்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த பலரும் பயன் பெறும் வண்ணம் விரிவாக்கப்பட்டது. பொருளாதார வாய்ப்புக்களுக்கான சட்டமே அமெரிக்க சேவைக்கான தொண்டர்படை (Volunteers in Service to America (VISTA), பணிசெய் படைகள் (Job Corps), ஆற்றலோடு தொடங்குதல் (Head Start), சட்ட சேவைகள் ஆணையம் (Legal Services Corporation - குற்றவியல் வழக்குகள் தவிர்த்த பிற வழக்குகளில், ஏழைகளுக்கு சட்டவுதவி கிடைக்க அரசும் தனியாரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சி), சமுதாயச் செயல்பாட்டு திட்டம் (Community Action Program - சமூகப் பொருளாதார உதவிகள் மூலம் வறுமையான சமூகங்களில் வறுமையையும், அதை நிலைத்திருக்கவைக்கும் காரணிகளையும் அகற்ற மாற்று வழிகள்) போன்ற பல திட்டங்களை முன்னெடுத்தன.
பார்க்க: Great Society - மேன்மைமிக்க சமூகம் - ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சன் அவர்களால் முதலில் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஓஹியோ பல்கலைக்கழகத்திலும், அமெரிக்க சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்பதை விளக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. இதனடிப்படையில் 1964 ஆம் ஆண்டு 'வறுமைக்கு எதிரான யுத்தம்' என்ற கருத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன பொருளாதார வாய்ப்புக்கான சட்டம், மருத்துவக் காப்பீடு, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, ஆற்றலோடு தொடங்குதல் (Head Start) என்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் சமூகப்பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

English

President Lyndon B. Johnson's plans and programs established during his administration to encourage economic well-being, promote equal opportunity for all, and realize the Great Society. The "war" was to be fought primarily through the programs of the Economic Opportunity Act of 1964. This included a major revision of the Social Security Act of 1935, including greatly extended coverage. The Economic Opportunity Act established Volunteers in Service to America (VISTA), the Job Corps, Head Start, the Legal Services Corporation, and the Community Action Program (CAP).