warism
போரார்வம், போர் விரும்பத்தக்கதென்றும் அதிலிருந்து பிரச்சனனைகளுக்குத் தீர்வுகாணலாமெனும் கோட்பாடு, கலகம் பிறந்தால் ஞாயம் பிறக்குமெனும் கோட்பாடு, அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் எனும் கருத்து
தமிழ் விளக்கம்
ஒரு நாடு போரின் மூலமும், தன் இராணுவ வலிமையின் மூலமும் வேறு வகையில் அடைய முடியாத வெற்றிகளை அடைய முடியுமெனும் கோட்பாடு.
பார்க்க: militarism - இராணுவவாதம், இராணுவ ஆட்சிக்குழு, தங்கள் நாட்டையும் தங்கள் நாட்டு நலனையும் காக்க ஒரு வலிமையான இராணுவம் தங்களிடம் எப்போதும் இருக்கவேண்டுமென்ற அரசுகள் மற்றும் மக்களின் விருப்பமே இராணுவாதம் எனப்படுகிறது. இது இராணுவத்தையும் இராணுவ வீரர்களையும் பெருமைப்படுத்தும் கலாச்சாரப் போக்காகவும், வேறெந்த அரசுத்துறையை விட இராணுவத்திற்கு முக்கியத்துவமளிக்கும் அரசு முறையாகவும் இருப்பது.
pacifism - அமைதிவாதம், போரொழிப்புக் கோட்பாடு, போர், வன்முறை இவற்றை எதிர்க்கும் கொள்கை, பிரச்சினைகளைப் போரின்றித் தீர்ப்பது, போரொழிப்பு விரும்பத்தக்கதென்றும், நடைமுறைப்படுத்தத் தக்கதென்னும் கோட்பாடு - அர்னாடு எமில் என்ற பிரஞ்சு சமாதானப் பிரச்சாரகரால் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தை, 1901 இல் கிளாஸ்கோவில் நடந்த பத்தாவது உலக அமைதி மாநாட்டில் சர்வதேசப் பயன்பாட்டிற்கு வந்தது. மனிதர்களிடமும், நாடுகளிடமும் உள்ள பிணக்குகளை அமைதியான வழிமுறைகளைக் கையாண்டு தீர்த்துக்கொள்ள முடியும் என்று அமைதிவாதிகள் நம்புகிறார்கள். அமைதிவாத, போரொழிப்புக் கோட்பாட்டுச் செயல்பாடுகளில் சமூகப்பணியாளர்கள் எப்போதும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வார்த்தையைப் பிணக்குகளை அதன் போக்கில் தீர்வுக்கு விட்டு செயல்படாதிருக்கும் நிலையுடனோ, முரண்டு பிடிப்பவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளுடனோ ஒப்பிடமுடியாது. அமைதிவாதம் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான முன்முடிவுகள் எடுப்பதிலும் அதற்கான மாற்று வழிகளைக் கையாள்வதிலும் முனைப்புடன் செயல்படும்.

English
The orientation that military conflict is morally justified and promises unique advantages for the nation that cannot be achieved in any other way. See also militarism and pacifism.