Washington, Forrester B. (1887-1963)
பாராஷ்டர் பலான்சார்ட் வாஷிங்டன் (1887 -1963)
தமிழ் விளக்கம்
பாராஷ்டர் பலான்சார்ட் வாஷிங்டன் (1887 -1963) - நியூயார்க் சமூகப்பணிக் கல்லூரியில் பயின்ற வாஷிங்டன், அட்லான்டா பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். சமூகப்பணி கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை அறிவியல் பூர்வமாக மேம்படுத்துவதில் அக்கறை காட்டியவர். கருப்பினத் தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட இவர் நகர்ப்புறங்களுக்கான தேசிய சம்மேளனத்தின் அமைப்பாளராகவும், தலைவராகவும் செயல்பட்டார்.
பார்க்க; National Urban League. - நகர்ப்புறங்களுக்கான தேசிய சம்மேளனம் - அமெரிக்க நகரங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகக் கடைப்பிடக்கப்பட்டு வந்த இனவிலக்கலுக்கு எதிராகவும், நகரங்களுக்குக் குடிபெயரும் நீக்ரோக்களுக்கு வீட்டுவசதி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும், நகர வாழ்வில் அனைவருக்குமான சமபங்கை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் உருவான சேவை நிறுவனம். இது தொழிற்சாலைகளில் பணிபுரியும் நீக்ரோக்களின் முன்னேற்றதிற்க்கான குழு (Committee for the Improvement of Industrial Conditions Among Negroes in New York (founded in 1906), கருப்பினப் பெண்கள் பாதுகாப்பிற்கான தேசியக் குழு (National League for the Protection of Colored Women (founded 1906), நகரங்களில் வாழும் நீக்ரோக்களின் மேம்பாட்டிற்கான சம்மேளனம் (National League on Urban Conditions Among Negroes) என்ற மூன்று நிறுவனங்களும் இணைந்து நகரங்களுக்கான தேசிய அமைப்பாக உருவெடுத்தது. நியூயார்க் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, ஏறக்குறைய 110 கிளைகளுடன் நாடு முழுவதும் செயல்படுகிறது.

English
Proponent of the scientific method for professional training of social workers, he was the long-time dean at the Atlanta University School of Social Work and an organizer–leader of the National Urban League.