Webb, Bernice (1858-1943) and Webb, Sidney (1859-1947)
சிட்னி வெப் (1859-1947) மற்றும் பெர்னிஸ் வெப் (1858-1943)
தமிழ் விளக்கம்
சிட்னி வெப் (1859-1947) மற்றும் பெர்னிஸ் வெப் (1858-1943) - இங்கிலாந்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சமூக சீர்திருத்தவாதிகள். பேபியன் சோசலிச (சிறுகச் சிறுகச் செய்யப்படும் சீா்திருத்தத்த்தின் மூலம் சோசலிசக் கொள்கையை நிறுவும் நோக்கமுள்ள) இயக்கத் தலைவர்கள். ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கவுரவமான வாழ்க்கை நிலைகள் வேண்டி வாதாடியவர்கள். உலகப் புகழ் பெற்ற இலண்டன் பொருளாதாரக் கல்லூரியை நிறுவியவர்கள். பீயாட்றிஸ் வெப் வறியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இங்கிலாந்தின் வறியவர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரவும் முயற்சி செய்தார். சிட்னி வெப் அரசியலில் ஈடுபாடு கொண்டு இங்கிலாந்தின் தொழிற் கட்சியை வலுவாக்கப் பாடுபட்டார். தொழிற் சங்கங்களைப் பற்றி இவர்கள் எழுதிய புத்தகங்கள் உலகம் முழுதும் படிக்கப்பட்டு, சோசலிசக் கருத்துக்களுக்கு வலு சேர்த்தது. இங்கிலாந்தின் கல்வி வளர்ச்சிக்கு இவர்களுடைய பங்கு முக்கியமானது.
English
British social reformers, leaders of the Fabian Society, advocates for better conditions for laborers and poor people, and founders of the London School of Economics. While Bernice worked to change existing poor laws and advocated for guaranteed minimum standards of living, Sidney engaged in politics and helped develop the Labour Party. They worked toward improved education and wrote influential books about the trade union movement.