welfare reform

சமூகநலச் சீர்திருத்தம்

தமிழ் விளக்கம்

சமூகநலத் திட்டங்கள் நிதியுதவி பெறும் முறை, நிர்வகிக்கப்படும் முறை, அதை மக்கள் பயன்படுத்தும் முறை போன்றவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரச் செய்யப்படும் முயற்சிகளை சமூகநலச் சீர்திருத்த முயற்சிகள் என்பர். உதவி பெறுவதற்கு மக்கள் தயங்குமளவு விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று சில சீர்திருத்தவாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் தகுதிச் சோதனைகளையும், நிர்வாகத் தடங்கல்களையும் களைய வேண்டுமென்கின்றனர். மக்களுடைய தேவைகளை அவர்களே பூர்த்திசெய்து கொள்ளுமாளவிற்குக் குறைந்த பட்ச வருமான உத்தரவாதத்திற்கு வழிவகுத்து நலத்திட்டங்களை நிறுத்திவிடலாம் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். சமீபத்தில் கிளின்டன் ஜனாதிபதியாய் இருந்த போது அறிமுகமான Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 - தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம் முக்கியமான நலச் சீர்திருத்தம் எனப்படுகிறது. அமெரிக்க அரசின் சமூகநலத் திட்டங்களைச் சீரமைக்கக் கொண்டுவரப்பட்ட முக்கியமான இச்சட்டத்தின் மூலமாக, சில சமூகநலத் திட்டங்கள் கலாவதியாக, வேறுசில திட்டங்களின் மூலம் கிடைத்த நன்மைகள் குறைக்கப்பட்டன. இச்சட்டத்தில் இன்னும் முற்போக்கான திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று கருதுகின்றனர். குடும்ப உதவித் திட்டம் (Family Assistance Plan (FAP), (குறைந்தபட்ச) ஆண்டு வருமானத்திற்கான உத்தரவாதம் (guaranteed annual income), எதிர்மறை வருமான வரி (negative income tax), நியூயார்க் நலத்திட்டம் (Newburgh welfare plan), நியாயமான சம்பளச் சட்டம் (work fare) போன்ற சட்டங்களிலும், திட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டுமென்று கோரி வருகின்றனர்.
பார்க்க: Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 - தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம் - அமெரிக்க அரசின் சமூகநலத் திட்டங்களை சீரமைக்கக் கொண்டுவரப்பட்ட முக்கியமான சட்டம். இச்சட்டத்தின் மூலமாக சில சமூகநலத் திட்டங்கள் கலாவதியாக, வேறுசில திட்டங்களின் மூலம் கிடைத்த நன்மைகள் குறைக்கப்பட்டன. மாற்றத்திற்கு உள்ளான சில திட்டங்கள் - ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுதல் (Aid to Families with Dependent Children (AFDC), உணவு அடையாளச் சீட்டு, படிவம், உணவுப் பொருட்கள் வாங்க பணமோ பணயுதவியோ பெறுவதற்காகக் கொடுக்கப்படும் படிவம் (Food Stamp program). சமூக நல மொத்த மானியம், (Social Services Block Grants), சிறார் பாதுகாப்புத் திட்டங்கள் (child protection programs), சத்துணவுத் திட்டங்கள் (child nutrition programs), ஈட்டிய வருமானத்தின் மீதான வரித் தள்ளுபடி (earned income tax credit ). எடுத்துக்காட்டாக ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டம், தேவையுள்ள குடும்பங்களுக்கான தற்காலிக உதவி என்று மாற்றப்பட்டு, அக்குடும்பத்து பெற்றோர் உதவி பெற ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் வேலைக்குச் செல்லவேண்டும், உதவிக்காலம் காலவரையின்றி தொடராமல் ஐந்து வருடங்களுக்குள் முடிந்துவிடும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 18 வயதிற்குக் குறைவான திருமணமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது உறவினருடன் வசித்தால்தான் உதவி பெறத் தகுதியானவர் என்று கணிக்கப்பட்டனர். ஏற்கனவே குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெரும் பெற்றோர்கள் மீண்டும் குழந்தை பெற்றால் அக்குடும்பத்திற்கு உதவி நிறுத்தப்ட்டது. எல்லோருக்குமான மருத்துவ உதவி உத்தரவாதம் கடுமையான நிபந்தனைக்குள்ளாக்கியது. சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற அகதிகளின் துணை வருமானப் பாதுகாப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் அமெரிக்க குடிமகன் அந்தஸ்து பெற்றால்தான் சில நலத்திட்டங்களுக்குத் தகுதியானாவர்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த அகதிகளுக்கான உதவி ஐந்து வருட காலத்திற்கு மட்டும் என்ற புது நிபந்தனை உருவானது. உணவு அடையாளச் சீட்டு வழங்குவதில் மாநிலங்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. முடக்குவாதம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் துணை வருமானப் பாதுகாப்பு திட்டத்திலிருந்து விலக்கழிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகளின் விளவு என்னவென்று முழுதுமாக அறியப்படவில்லை.
Family Assistance Plan (FAP) குடும்ப உதவி திட்டம் - ஒரு அமெரிக்கக் குடும்பம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானமீட்ட இயலா நிலையிலிருந்தால், அக்குடும்பத்திற்கு உத்தரவாதமான வருமானம் தர வகைசெய்ய அமெரிக்க சமூக நலத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது பரிந்துரைக்கப்பட்ட திட்டம், அமெரிக்கப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடக்காததால் நிறைவேறவில்லை
guaranteed annual income - (குறைந்தபட்ச) ஆண்டு வருமானத்திற்கான உத்தரவாதம் - அரசு உதவி வழங்குவதற்கான வருமான வரம்பு நிர்ணயச் சோதனைக்குப் பதிலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்த பட்ச உதவியையோ, பயன்களையோ அரசுத் துறைகள் மூலமாக அனைவருக்கும் வழங்கும் கொள்கை.
negative income tax - எதிர்மறை வருமான வரி - வருமானவரி கட்டும் வருவாய்ப் பிரிவினருக்கு உதவக்கூடிய வகையில், அவர்களுடைய வருமானம் குறிப்பிட்ட அளவிற்குக் கீழிறங்கும் போது அவர்களுடைய குறைந்த வருமானத்தை ஈடுகட்ட அவர் செலுத்திய வரியிலிருந்து திரும்பக் கொடுத்து வருமான அளவை நிலையாக்கத் தரப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறை.

English

Various efforts to change the way social welfare programs are administered, funded, and used. Some reformers seek more stringent rules to discourage people from obtaining assistance. Others advocate elimination of bureaucratic obstacles and any means tests. Some advocate replacing the entire welfare system with a guaranteed annual income for all people that would meet each person's minimal requirements. The most significant recent attempt to reform "welfare as we know it" occurred during the Clinton administration with the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (P.L. 104-193). Many welfare experts say the act needs to be reformed. Other welfare reform proposals identified in this dictionary include the Family Assistance Plan (FAP), the guaranteed annual income, the negative income tax, the Newburgh welfare plan, and work fare.