welfare rights

நலமுடனிருக்கும் உரிமை, நல உரிமைகள்

தமிழ் விளக்கம்

சமூக மற்றும் பொதுநல உதவிகளைத் தரவேண்டியது அரசின் / சமூகக் கடமையென்றும், அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது என்னும் கண்ணோட்டாம். சமூகநல உதவியைப் பெரும் ஒவ்வொருவரைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களின் இரகசியத் தன்மை, அத்தகவல்களை விசாரிப்பவர்களால் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டுமென்பதும், நலத்திட்டங்களைப் பற்றிய தகவல்கள் தேவைப்படுவோருக்கு கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமென்பதும், சமூக நல அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் மக்கள் சென்றுவர வசதியான இடங்களிலும், வசதியான நேரங்களிலும் செயல்படவேண்டுமென்றும், அலுவலகத்தில் காத்திருக்கும் நேரம் குறைக்கப்படவேண்டுமென்றும், உதவிகள் மற்றும் உதவித் தொகை அளவுகளில் பாரபட்சம் காட்டப்படலாகாது என்றும் சமூக நல உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.

English

The view that public assistance and other social services are entitlements available to any of a nation's citizens. Welfare rights organizations say that among the rights of welfare recipients are confidentiality of personal information from welfare investigators, greater availability of information about the benefits for people who are eligible, increased accessibility of welfare offices (nearer to transportation routes, open longer hours, and shorter waiting lines), and more equitable distribution of services and funds.