whistle blowing

சீழ்க்கையடித்தல், விசில் அடித்தல், தவறுகளை வெளியே சொல்பவர்

தமிழ் விளக்கம்

1. ஒரு தவறை, தீமையை அகற்ற அதைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி. 2. ஒரு நிறுவனத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு மாறான நடத்தைகளையோ, அல்லது அங்கு நடக்கும் சட்டவிரோதமான, ஆபத்தான, பயனற்று விரயமாகக் கூடிய செயல்களை அதிகாரத்திலுள்ளவர்களிடமோ அல்லாது செல்வாக்கு மிக்கவர்களிடமோ கொண்டு சென்று தவறுகளைத் தடுக்க நினைக்கும் முயற்சி. நிறுவனத் தவறுகள், அதே நிறுவனத்திலுள்ள உயரதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லப்படும் பட்சத்தில் அது ஊதாசீனப்படுத்தப் படாலாம் அல்லது சொல்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாமென்பதால், அந்தத் தகவலை உண்மையறியும் (புலனாய்வுக்) குழுவிடமோ, ஊடகங்களிடமோ, குறைதீர்ப்பாயங்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ (சட்டமன்ற / பாராளுமன்ற) எடுத்துச் செல்லலாம். சில நாடுகளில் அரசாங்கங்களே குறைகளைத், தவறுகளைச் சொல்லவைக்க இலவச தொலைபேசி வசதிகளையும், தகவல் சொல்பவரின் இரகசியத்தைச் சட்டபூர்வமாகக் காப்பாற்றவும், தேவைப்பட்டால் அவருக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. அமெரிக்காவின் தேசியச் சமூகப்பணியாளர் சம்மேளனம், தவறுகளை வெளியே சொல்லும் இந்த நடைமுறைக்கு ஆதரவு தருகிறது. சமூகப்பணித் தொழில்நெறிகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் சமூகப்பணியாளர்கள் பற்றியோ, தொண்டு நிறுவனங்களில் நடக்கும் தவறுகளைப் பற்றியோ, சமூக நலத் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் பற்றியோ தகவல் கொடுப்பவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை (விசில் அடிப்பவர்களுக்கு) ஜாக் ஓடிஸ் விசில்ப்ளோயர் (Jack Otis Whistleblower Award) பரிசு கொடுத்து கவுரவப்படுத்துகிறது.

English

Informing those people in positions of influence or authority out-side an organization about the existence of an organization's practices that are illegal, wasteful, dangerous, or otherwise contrary to its stated policies. The informant is compelled to notify outsiders (investigative commissions, the media, ombudspersons, congresspersons, and others) because authorities within the organization ignore complaints. Some organizations, such as the U.S. government, encourage whistle blowing by maintaining toll-free hot lines for anonymous tipsters and by trying to protect employees from subsequent retribution from their employers. Organizations such as the National Association of Social Workers (NASW) give awards to whistle-blowers whose information has led to significant improvements. NASW bestows a biennial prize, the Jack Otis Whistleblower Award, to social workers who take steps to prevent unethical practices of employing organizations.