white-collar crime

அலுவலகப் பாணியாளரின் குற்றச் செயல்கள், வெள்ளுடைக் குற்றங்கள்

தமிழ் விளக்கம்

பெருநிறுவனங்களோ அல்லது தனியார் மற்றும் அரசுத் துறையில் பணியாற்றும் தனிநபர்களோ, தங்களின் பணியினூடாக, தாங்களோ அல்லது தங்களைச் சார்ந்தவர்களோ சுயலாபம் அடையும்படிக்கு, வன்முறையைப் பிரயோகிக்காமல் ஆனால் சட்டவிரோதமாகச் செய்யும் செயல்கள். பணத்தைக் கையாடல், மோசடி, போலிப் பத்திரம் உண்டாக்கல் அல்லது பத்திரத்தில் போலிக் கையெழுத்திடல், வரி ஏய்ப்பு, கடன் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், இலஞ்சம் வாங்குதல், உறவினர்களுக்குத் தகாத சலுகை அளித்தல், கணனித் தகவல்களை மாற்றுதல், பங்குச் சந்தை மோசடிகள் போன்ற குற்றங்கள் இதில் அடங்கும்.

English

Nonviolent illegal acts typically committed by corporations or individuals, usually in the course of the offender's occupation. Such offenses include embezzlement, fraud, forgery, tax evasion, fraudulent use of credit cards, stock manipulation, bribery, and computer crime.