white flight

வெள்ளையர் குடிப்பெயர்ச்சி, வெள்ளையர் இடம்பெயர்தல், வெள்ளையர் ஓடிப்போதல்

தமிழ் விளக்கம்

சில குடியிருப்புப் பகுதிகளில் இனரீதியாக மக்கள் மீண்டும் ஒன்றிணைவதை விளக்கும் வழக்குச் சொல். ஒரு குடியிருப்புப் பகுதியில், கருப்பினத்தவர்கள் வீடு வாங்கி குடியிருக்கத் தொடங்கும் போது, இனத் துவேசமிக்க வெள்ளையர்கள், இனிமேல் அக்குடியிருப்பு சமூகப் பொருளாதாரப் போக்கில் ஷீனமடையும் (ஷீனமடைந்ததன் அறிகுறியே அங்கு கருப்பினத்தவர்கள் குடியேற ஆரம்பிப்பது) என்று அவசரமாக அங்கிருந்து இடம்பெயர ஆரம்பிப்பர். அவரைப் பார்த்து பிற வெள்ளையினத்தவரும் இடம்பெயர பல குடியிருப்புகள் (வீடுகள்) காலியாகி, மேலும் அதிகமான கருப்பினத்தவர் குடியேற வழிவகுக்கும். இந்த நடைமுறை அங்கு குடியிருக்கும் அனைத்து வெள்ளையின மக்களும் காலி செய்யும் வரை அல்லது அங்கிருந்து ஓட்டமெடுக்கும் வரை தொடரும்.

English

A lay term used to describe demographic patterns of racial resegregation in residential neighborhoods. The pattern is said to begin in some neighborhoods when one or more black families establish residence. Some white families who fear the possibility of negative economic or social conditions or who are racist move away precipitously. Many homes thus become vacant and then become occupied by more black families. The pattern continues as more white families "flee".