White House conferences

வெள்ளை மாளிகை மாநாடுகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க தேசத்தின் முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி கலந்தாலோசிக்க, முக்கியமாக சமூக நலம் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கவும், சாத்தியமான தீர்வுகளைப் பற்றிக் கலந்தாலோசனை செய்யவும், அமெரிக்க ஜனாதிபதியால் முறையாகக் கூட்டப்படும் மாநாடுகள் அல்லது கலந்தாலோசனைக் கூட்டங்கள். தியோடர் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்தபோது குழந்தைகள் நலனுக்காக 1909 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் அவர் கூட்டிய மாநாடும், அதன் விளைவாகக் குழந்தைகளுக்கான செயலகம் 1912 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதும் ஒரு முன்மாதிரியாகும். அதற்குப் பிறகு நடந்த வெள்ளை மாளிகை மாநாடுகள், முதியோர் நலன், அமெரிக்கக் குடும்பங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள் போன்ற பல தலைப்புகளில் நடத்தப்பட்டு, அதன் விளைவாக அப்பிரச்சனைகளைக் கையாள, புதுச் சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், புதிய திட்டங்கள் என்று முயற்சிகள் தொடங்கப்பட்டன.

English

Formal meetings, convened by the U.S. president, of the nation's leaders in various social welfare and health fields to discuss specified social problems and potential solutions. The prototype conference was President Theodore Roosevelt's 1909 White House Conference on Child Welfare, which led to the development of the Children's Bureau. Subsequent conferences have focused on problems of older Americans, health care, and families, and most have culminated in new laws and programs designed to resolve some of the problems addressed.