white supremacist groups
வெள்ளை மேலாதிக்கவாதக் குழுக்கள்
தமிழ் விளக்கம்
வெள்ளையினத்தவரைத் தவிர, நிற அடிப்படையிலான பிற இனத்தவர் மீது குறிப்பாக கருப்பினத்தவர் மீதும், கிறிஸ்துவர்கள் அல்லாத பிற மதத்தினர் மீதும், ஆங்கிலம் தவிர பிற மொழிகளைப் பேசும் மக்களின் மீது, இன துவேசத்தை தூண்டி தவறான பிரச்சாரங்கள் மூலம் வெறுப்பை வளர்த்து, அதன் மூலம் வன்முறையையைப் பிரயோகித்து அச்சுறுத்தி, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்க அமெரிக்காவில் செயல்படும் இன அடிப்படையிலான நிறுவனங்கள். நியோ நாஜிக்களின் கோட்பாடுகளையும், முறைகளையும் பின்பற்றும் ஆரிய தேசத்தினர் (Aryan Nations), போஷி காமிடேடஸ் (Posse Comitatus) தேசியக் கூட்டமைப்பு (National Alliance), வெள்ளை ஆரிய எதிர்ப்பியக்கம் (White Aryan Resistance), மொட்டைத் தலையர்கள் (skinheads) போன்ற குழுக்கள் அமெரிக்காவில் இயங்கும் இன அடிப்படையிலான தீவிர வாதக் குழுக்கள்.
English
Organizations in the United States whose members seek to suppress people of color or religions other than Christianity or the speaking of languages other than English, often through ethnoviolence and hate crimes, propaganda, and intimidation. The groups maintain Ku Klux Klan (KKK) or neo-Nazism ideologies and methods and include such organizations as Aryan Nations, Posse Comitatus, the National Alliance, the White Aryan Resistance, The Order, and the skinheads.