willfulness

தன்போக்கு, ஸ்வச்சந்தம், தன்னிட்டம், தன்னெடுப்பு, தன்கொண்டி, திண்ணியம மனோதைரியம்

தமிழ் விளக்கம்

எதிலும் உறுதியுடனிருத்தல், எளிதில் விட்டுக்கொடுக்காத தன்மை, தெளிவான குறிக்கோள் போன்ற குணங்களைக் குறிக்கும். இந்த குணங்களைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதை நல்லது அல்லது தீயது எனலாம். இந்த குணங்கள் வெவ்வேறு சமூகப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் சமூகத் தலைவர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், முரட்டுப் பிடிவாதமுள்ள இளைஞர்கள், தன் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுபவர்கள், ஆளுமைச் சீர்கேடுள்ளவர்கள் போன்றோர்களிடம் வெவ்வேறு அளவுகளில் வெளிப்படும். சில நேரங்களில், இக்குணமுள்ளவர்களை வலுவான ஆளுமை பொருந்தியவர்கள் என்றும் அழைப்பதுண்டு.

English

Determination, stubbornness, or purposeful intention. This quality is seen as having good and bad characteristics depending on its use. It exists in various degrees in leaders of social causes, activists, rebellious adolescents, obsessive- compulsive people, people with personality disorders, and other people said to have "strong personalities".