window period

அடைகாத்தல், நோயரும்பல், அடைகாக்கும் காலம், (நோய்) உள்ளுறை காலம், அடைவுக்காலம்

தமிழ் விளக்கம்

நோய்வாய்ப்படுதலில், தொற்று ஏற்பட்டு அந்த தொற்றின் விளைவாக ஏற்படும் நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் கால இடைவெளி, கானெறி காலம், நோய் வெளிப்படாமல் உள்ளுறையும் காலம் - பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறிக்குக் காரணமான (Acquired immune deficiency syndrome), மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட தீ நுண்மம் (வைரஸ் HIV ) தொற்றிய பிறகும், அதை பரிசோதித்துப் பார்க்கும் போது, நோய் எதிர்ப்பொருள் (அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்) உடலில் தெரியாத நிலை. கானெறி காலம் (window period) என்பது தொற்று ஏற்பட்டு அந்தத் தொற்றைக் கண்டறியத் தேவைப்படும் கால இடைவெளி.

English

A term used by researchers of acquired immune deficiency syndrome (AIDS) for the time just after infection with the human immunodeficiency virus (HIV), during which the individual is infectious, but antibody tests do not detect it. See also incubation.