withdrawal symptoms
விலக்கல் அறிகுறிகள்
தமிழ் விளக்கம்
போதை மருந்துப் பழக்கத்திற்கோ, மதுப் பழக்கதிற்க்கோ பழக்கமானவர்கள் அல்லது அடிமையானவர்கள், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முயலும்போது எதிர்கொள்ளும் உடல் மற்றும் உள (உணர்வு) ரீதியான அவஸ்தைகள். இப்பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு உடல் நடுக்கம், வயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறுகள், சித்தப் பிரமை, வலிப்பு, பயம், பீதிக்குள்ளாதல், மிகு பதட்டம் / கவலை மற்றும் ஊசலாடும் எண்ணங்கள் போன்றவை ஏற்படுவது அறிகுறிகளாகும்.
பார்க்க: Alcohol withdrawl - மதுப் பழக்கத்திலிருந்து மீளுதல் - மிதமிஞ்சிய மதுப் பழக்கமுடையவர்கள் அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் போதோ, அல்லது மதுவின் அளவைக் குறைக்க முயற்சி செய்யும்போதோ ஏற்படும் அறிகுறிகள் - நடுக்கம், வாந்தி, மனச்சோர்வு, பதட்டம், எரிச்சல், மிகை உணர்ச்சி, மிகை இதயத் துடிப்பு, வியர்வை, வெறியில் பிதற்றுதல், உள மருட்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

English
The physical and emotional reactions of a person who has discontinued the use of certain drugs or alcohol to which he or she has become dependent, addicted, or habituated. The individual may experience such reactions as tremor, pain in the digestive system, delirium tremens (DTs), convulsions, fear and panic disorder, acute anxiety, and mood swings.