Wobblies

உலகத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் வழக்குச் சொல்

தமிழ் விளக்கம்

முதல் உலகப்போருக்கு முன்னர் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்ட உலகத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பட்டப்பெயர். இந்தத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு, உலக அரசாங்கம் ஏற்படுத்துமுகமாக, அமெரிக்க அரசை கவிழ்க்கச் சதி செய்தது என்று கூறி தடை செய்யப்பட்டது.

English

Slang for supporters of the Industrial Workers of the World (IWW), a federation of labor unions prominent before World War I that sought to improve working conditions and unite workers from all nations. IWW often was accused of trying to supplant U.S. government and social structures with a world government and order.