Women's Bureau, U.S.

அமெரிக்க அரசின் பெண்கள் பணியகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்குகிற, அமெரிக்கப் பெண்களின் பணித்தன்மை குறித்து அக்கறை கொண்டு செயல்படும் அலுவலகம். பெண்களுக்குச் சாதகமான, பயனளிக்கக் கூடிய பல திட்டங்களை இத்துறை நடைமுறைப்படுத்துகிறது. பணிக்காக இடம் பெயரும் தாய்மார்கள், திருமணமாகாமல் தாய்மையடைந்த (கன்னித்) தாய்மார்கள், கருப்பினப் பெண்கள், மற்றும் குழந்தை நலச் செயல்பாடுகள் என்று பல்வேறு திட்டங்களை இவ்வலுவலகம் அமல்படுத்துகிறது.

English

The organization within the U.S. Department of Labor whose primary concern is the working conditions of women. It administers a variety of programs to see that these conditions are favorable. Other programs of the Women's Bureau include helping displaced homemakers, teenage mothers, and women of color and providing child care services.