Women's International Peace Congress

உலக சமாதானத்திற்கான பெண்கள் மகாசபை

தமிழ் விளக்கம்

போர் எதிர்ப்பிற்காக, ஒவ்வொரு நாட்டிலும் செல்வாக்குப் பெற்றிருந்த பெண் தலைவியர்கள், 1915 ஆம் ஒன்று கூடிய நிகிழ்ச்சி. இதில் ஜேன் ஆடம்ஸ் மற்றும் எமிலி கிரீன் பால்ச் என்று உலக சாமாதானத்திற்காக, பின்னாளில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண்மணிகளும் பிர்திநிதிகளாகக் கலந்துகொண்டனர். இந்த மகாசபையின் முயற்சியால், அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் சர்வதேச சமாதானத்திற்கான 14 அம்சத் திட்டத்தையும், போர்கள் நடைபெறா வண்ணம் காக்க, உலக நாடுகள் சங்கம் (League of Nations, LON) என்ற பன்னாட்டுக் கழகம் ஏற்படுத்தவும் காரணமாக அமைந்தார். பெண்கள் மகாசபையின் பெயர் பல தடவை மாற்றப்பட்டு, கடைசியில் அமைதிக்கும் சுதந்திரத்திற்குமான சர்வதேசக் கழகம் என்றழைக்கப்பட்டது.

English

The 1915 gathering of women from around the world who were leaders in their respective countries on behalf of the antiwar movement. American delegates Jane Addams and Emily Greene Balch (the only two social work leaders to receive Nobel Peace Prizes) were joined by delegates from neutral and belligerent nations on the eve of World War I. The later work of this group greatly influenced President Woodrow Wilson's Fourteen Point Program for International Peace and the League of Nations. The organization evolved through several names and currently exists as the International League for Peace and Freedom.