women's liberation movement

பெண்கள் விடுதலை இயக்கம்

தமிழ் விளக்கம்

பாலினப் பொறுப்புக்களை பெண்களுக்குச் சுமையானதாக்கி ஒட்டுமொத்த பெண்களுக்கும் மன இறுக்கம் மற்றும் மன நிம்மதியைக் குறைக்கும் சமூகக் கண்ணோட்டத்திலிருந்து விடுவிக்கவும், பெண்களைப் பாரபட்சமாகவும், இரண்டாம் பட்சமாகவும் நடத்தும் நடைமுறையைத் தடுக்கவும், ஆண்களுக்கு இணையான சம வாய்ப்பைப் பெறவும், மாறிவரும் சமூகத்தில் பெண்கள் புதிய பொறுப்புகளை எடுத்துச் செயல்பட ஆதரவை வேண்டியும், பல்வேறு பின்னணியிலிருந்து வந்த பெண்களும், பெண்கள் குழுக்களும் எடுத்த முயற்சிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகம்.
பார்க்க: Sex role stereotyping - பாலினப் பொறுப்புக்களை ஒரே மாதிரியாக்கல் / மாறாததாக்குதல் / வகைப்படுத்தல் - ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றியும், அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் (ஆண்கள் ஆண்மையோடும், பெண்கள் நளினமாகவும் நடந்து கொள்ளவேண்டும்) என்று முன்னரே தீர்மானித்து, அதை எளிதில் மாற்றிக் கொள்ளமுடியாதபடி மனதில் நிலைபெறவைத்து, தாங்கள் முன்னரே தீர்மானித்து வைத்தபடி ஆண்களும், பெண்களும் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தங்களுடைய எதிர்பார்ப்புகள் ஈடேறாதபோது அவர்களைப் பாரபட்சமாக நடத்துதல் அல்லது முத்திரை குத்தல் போன்ற செயல்களை முடிவுக்குக் கொண்டு வர முயன்ற இயக்கம்.

English

The organized efforts of disparate people and groups to eliminate sex role stereotyping and sex discrimination against women, achieve equality of opportunity with men, and widen the range of acceptable behaviors identified with female roles and femininity. See also men's liberation movement.