women's suffrage movement

பெண்களுக்கான வாக்குரிமை இயக்கம்

தமிழ் விளக்கம்

பெண்கள் வாக்குரிமை (women's suffrage) என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், அரசுப் பணிகள் / பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும். சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணமாகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாடு முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860 களில் சுவீடன், இங்கிலாந்து, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சில மேற்கு மாநிலங்களில், பெண்கள் வாக்களிக்க உரிமை பெற்றனர். பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து, 1893 இல் குறிப்பிட்ட வயதடைந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாக சிறப்புற்றது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா குடியேற்றப் பகுதியில் பெண்கள் 1895 இல் வாக்களிக்க உரிமை பெற்றார்கள். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உரிமை பெற்றார்கள். ஆனால் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை நியூசிலாந்தில் 1919 இல் தான் பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன்முதலில் பின்லாந்து நாட்டில்தான் வாக்களிக்கும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை வழங்கப்பட்டது. அவ்வாறு உரிமை வழங்கப்பட்ட 1907 இல், பின்லாந்து ரஷ்யப் பேரரசில் தனித்தியங்கிய நாட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண் தெரிந்தெடுக்கப்பட்டார். வாக்குரிமை பெறுவதற்கு, பெண்கள் பல நாடுகளில் போராட வேண்டியிருந்தது. நாடு முழுவதற்கும் பொது வாக்குரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறு போராடித்தான் பல நாடுகளில் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள். 1979 இல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட 'பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாரபட்ச நடத்தைகளையும் ஒழித்தல்' பற்றிய அறிக்கை'யின்படி, பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

English

The organized political and social campaign to establish civil and social rights for women, especially the right to vote. In the United States this movement was strongest from the time of the Seneca Falls Convention in 1848, which outlined the equal rights for women goals, to the passage in 1920 of the 19th Amendment to the Constitution, which gave women the right to vote. The movement continues in several nations where the rights of women to participate in the political process are limited.