work ethic

பணி நெறிமுறை, பணி ஒழுக்கம்

தமிழ் விளக்கம்

1. ஒருவர் அவர் செய்யும் வேலையை அர்ப்பணிப்போடு செய்யும்போது அந்த வேலை அவரின் நடத்தையையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் எனும் கோட்பாடு. 2. தனிமனிதர்கள் மற்றும் சமூக கலாச்சாரக் குழுக்களின் குறிக்கோளுடன் கூடிய செயல், அந்தச் செயலில் காட்டும் திறன் மற்றும் ஈடுபாடு, அந்த செயலால் கிடைக்கும் சாதனைகளை வெளிப்படுத்தும் நடத்தை மற்றும் கருத்தியலைக் குறிக்க பயன்படும் சொல்லாடல். பணி நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும், வாழ்க்கையில் மேம்பாடடைய எல்லாத் தகுதிகளும் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மாறாக, பணி நெறியில்லாதவர்கள், பணி ஒழுக்கம் இல்லாதவர்கள், மந்த புத்தியுள்ளவார்களாகவும், கற்பனை வறட்சியுள்ளவர்களாகவும், ஊக்க்மில்லாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

English

An ideology and a behavior found in many individuals and sociocultural groups that emphasize purposeful activity, productivity, and accomplishment. People so oriented are considered to be socially responsible and deserving of the advancements they tend to receive. However, they often are considered by those who do not share this ideology to be dull, unimaginative, and spiritless.