work experience programs

பணி அனுபவத்திற்கான திட்டங்கள்

தமிழ் விளக்கம்

வேலை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதற்காக, அதற்கான பணி அனுபவத்தைப் பெற, தனியார் நிறுவனங்களிலும், சமூக சேவை நிறுவனங்களிலும், குறைந்த காலத்திற்கு அரசு மானிய உதவியுடன் வேலை பார்க்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் சந்தைப்படுத்தக்கூடிய வேலைத்திறன்களில் பயிற்சி அளிப்பதல்ல. மாறாக வேலை பார்க்குமிடங்களில் சூழ்நிலையோடு இணக்கமாகச் செல்லும் ஒப்புரவுத் திறனை வளர்ப்பதே. சமூகப்பாதுகாப்பு திட்டப் பயனாளிகளை, தன்னம்பிக்கை பெற வைக்கவும், பொறுப்புணர்வை வளர்க்கவும், குறிப்பிட்ட நேரத்தில் பணியிடத்திற்கு வருவதைப் பழக்கவும், சக பணியாளர்களோடு இணக்கமாக நடந்து ஒத்துழைக்கவுமான பண்பை வளர்த்துக்கொள்ளுதலே இத்திட்டத்தின் நோக்கம்.
பார்க்க: Community Work Experience Program (CWEP) - சமுதாயப் பணியில் அனுபவம் பெறுவதற்கான திட்டம் - இந்த திட்டத்தின்படி, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டப் பயனாளிகள், நிரந்தரமாக நலத்திட்ட உதவிகளைச் சார்ந்திராமல், அவர்களுக்கு பணி / தொழில் செய்யும் திறனை வளர்க்கும் அனுபவத்தை உருவாக்க வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. இதன்படி பயனாளிகள் பெரும் உதவியின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணி நேரம் அரசு அல்லது தொண்டு நிறுவனங்களில் பணிப்பயிற்சி பெற வேண்டும். பணியில் காலம் தவறாமை, சக பணியாளர்களிடம் நல்லுறவு, வாடிக்கையாளர்களுடன் சுமுகமாகத் தொடர்பு கொள்ளல் போன்றவற்றில் திறனை வளர்த்து, தாங்களும் வேலை செய்து வருமானமீட்டவேண்டுமென்ற ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுவதற்கு இந்த பயிற்சி உதவுகிறது

English

Social services and labor programs designed to help clients become more employable by placing them in subsidized jobs in nonprofit agencies, usually for short periods. The goal gives less emphasis to training for specific marketable skills and more emphasis to improving workplace coping skills. This includes enhancing clients' self-confidence, sense of responsibility, and self-discipline; stressing the importance of timely reporting for work; and teaching clients to relate cooperatively with coworkers. See also Community Work Experience Program (CWEP).