Work Incentive (WIN) program

வேலைக்கு (செல்ல) ஊக்குவிக்கும் திட்டம்

தமிழ் விளக்கம்

1967 ஆம் ஆண்டு ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம். வேலையற்று இருந்தால்தான் ஒரு தாய்க்கும் அவரின் குழந்தைகளுக்கும் உதவி அளிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தி, அரசு உதவி பெற்றாலும், தாய்மார்களை வேலைக்குச் செல்ல ஊக்குவித்தது. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டாலும் அதற்குப் பிறகு, 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டத்தில் உதவி பெரும் குடும்பங்களின் வேலைதேடும் முயற்சியை ஊக்குவித்தது.
பார்க்க: Personal Responsibility and Work Opportunity Reconciliation Act -தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம் - அமெரிக்க அரசின் சமூகநலத் திட்டங்களைச் சீரமைக்கக் கொண்டுவரப்பட்ட முக்கியமான சட்டம். இச்சட்டத்தின் மூலமாக சில சமூகநலத் திட்டங்கள் கலாவதியாக, வேறுசில திட்டங்களின் மூலம் கிடைத்த நன்மைகள் குறைக்கப்பட்டன. மாற்றத்திற்கு உள்ளான சில திட்டங்கள். எடுத்துக்காட்டாக ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவும் திட்டம், தேவையுள்ள குடும்பங்களுக்கான தற்காலிக உதவி என்று மாற்றப்பட்டு, அக்குடும்பத்துப் பெற்றோர் உதவி பெற ஆரம்பித்த இரண்டு வருடங்களுக்குள் வேலைக்குச் செல்லவேண்டும், உதவிக்காலம் காலவரையின்றி தொடராமல் ஐந்து வருடங்களுக்குள் முடிந்துவிடும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 18 வயதிற்குக் குறைவான திருமணமில்லாமல் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது உறவினருடன் வசித்தால்தான் உதவி பெறத் தகுதியானவர் என்று கணிக்கப்பட்டனர். ஏற்கனவே குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெரும் பெற்றோர்கள் மீண்டும் குழந்தை பெற்றால் அக்குடும்பத்திற்கு உதவி நிறுத்தப்ட்டது. எல்லோருக்குமான மருத்துவ உதவி உத்தரவாதம் கடுமையான நிபந்தனைக்குள்ளாக்கியது. சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற அகதிகளின் துணை வருமானப் பாதுகாப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் அமெரிக்க குடிமகன் அந்தஸ்து பெற்றால்தான் சில நலத்திட்டங்களுக்கு தகுதியானாவர்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த அகதிகளுக்கான உதவி ஐந்து வருட காலத்திற்கு மட்டும் என்ற புது நிபந்தனை உருவானது. உணவு அடையாளச் சீட்டு வழங்குவதில் மாநிலங்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. முடக்குவாதம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் துணை வருமானப் பாதுகாப்பு திட்டத்திலிருந்து விலக்கழிக்கப்பட்டனர். இந்தக் கட்டுப்பாடுகளின் விளவு என்னவென்று முழுதுமாக அறியப்படவில்லை.

English

The 1967 revisions in the Aid to Families with Dependent Children (AFDC) program that permitted and encouraged mothers receiving AFDC payments to work. The program was eliminated, but many of its goals were incorporated into the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996.