work release program
(குற்றவாளிகளை வெளியே) பணிசெய்ய அனுமதிக்கும் திட்டம்
தமிழ் விளக்கம்
குற்றவாளிகளைச் சீர்திருத்தும் இல்லங்களிலிருந்தோ அல்லது சிறைச்சாலைகளில் உள்ள நன்னடத்தைக் குற்றவாளிகளை வெளியே சென்று ஊதியத்துடன் வேலைபார்க்கக் கொடுக்கப்படும் அனுமதி. மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்ளில் வெளி உலகத்தோடு பழக வாய்ப்பு கிடைப்பதால், வெளி வேலைக்குச் செல்ல வாய்ப்பும் அதனடிப்படையில் சமுதாயத்தோடு இணக்கமாக வாழவும் இம்முறை உதவுகிறது.
பார்க்க: community service sentence - சமுதாயத்திற்கு சேவை செய்யுமாறு கொடுக்கப்படும் தண்டனை - ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் குற்றவாளி, சிறைத்தண்டனைக்கு மாற்றாக அதற்கு இணையான காலம் சமுதாய சேவை செய்ய நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு. இம்மாதிரியான தீர்ப்பைப் பெற்றவர்கள், வீடற்றவர்களுக்கான முகாம்களில் உணவு பரிமாறுதல், பெற்றோர்களற்ற குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்லல், போதைப் பழக்கத்திற்கு எதிராகப் பள்ளிகளில் பிரச்சாரம், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவி என்று பல சேவைகள் செய்ய உத்தரவிடப்படுவார்கள்
half way houses - இடைக்காலத் தங்குமிடங்கள் - மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்கு செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்கள்.

English
A system whereby an inmate of a correctional or other institution is permitted to leave the facility regularly to maintain his or her paid employment. Often this program is used in conjunction with a halfway house, so that the inmate has greater local access to the job and greater opportunity to re-enter society when the required period of incarceration is concluded. See also community service sentence.