workers compensation
தொழிலாளர் இழப்பீடு
தமிழ் விளக்கம்
ஒரு தொழிலாளி, தொழில்சார் நோயாலோ அல்லது பணியிட விபத்துக்களால் காயமுற்றாலோ, அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முழுதுமாகவோ அல்லது பகுதியாகவோ முதலாளிகளாலோ, காப்பீட்டு நிறுவனங்களாலோ அல்லது அரசாலோ இழப்பீடு வழங்கும் நடைமுறை. தொழில்மயமான நாடுகளில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க தேசிய அளவில் முறையான திட்டங்கள் செயல்படுகின்றன. அமெரிக்காவில், தொழிலாளர்களுக்கான இழப்பீடு வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பாதலால், இழப்பீட்டின் தன்மை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பெரும்பாலான மாநிலங்களில், முதலாளிகள் இதற்கென செலுத்தும் சந்தாவை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டு நிறுவனங்களே இழப்பீடு வழங்கும். ஆனால் சில முக்கியப் பிரச்சனைகளில் மாநில அரசுகள் அல்லது மத்திய அரசின் கண்காணிப்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது.
English
Programs-funded by employers, insurance companies, and government-to pay employees for some part of the cost of occupational diseases and injury. Most industrial countries have uniform national programs for such reimbursement. However, in the United States the programs are established primarily under state law and thus vary widely as to the amount of compensation and the conditions under which compensation is to be awarded. In most states, the benefits are underwritten through private insurance companies whose premiums are paid by employers. The specific awards are usually under the scrutiny of state boards and U.S. Department of Labor supervision.