workfare

சம்பளமற்ற வேலை

தமிழ் விளக்கம்

திடகாத்திரமான உடலுடையவர்கள் சமூகநலத் திட்ட உதவிகளைப் பெறுவதை இகழ்ச்சியாகக் கருத, அதில் ஆர்வமில்லாததாக்க பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் திட்டவியலாளர்கள் பிரேரிபிக்கும் கருத்து. இது அரசு மற்றும் தனியார் துறைகளில் அளவான சம்பளத்தோடு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் கருத்து. இது ஒரு கருத்தாக்கமே தவிர, குறிப்பிட்ட திட்டமல்ல.
பார்க்க; workhouse - வேலைக் கொட்டடிகள் - 18 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான நாடுகளில், உதவி தேவைப்படும் திடகாத்திரமான ஏழைகளுக்கு வேலைக் கொட்டடிகளில் வைத்து, வேலைவாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக உணவும் உறைவிடமும் தந்த நடைமுறை. அரசே வறியவர்களை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைத்து, அவர்களின் வேலைக்கீடாக அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்க செய்துகொண்ட ஒப்பந்தம். இந்த நடைமுறையில், கைக்குழந்தைகள், சிறார்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், நோய்வாய்ப்பட்டோர்கள் மற்றும் ஆரோக்கியமான திடகாத்திர உடல்வலுவைப் பெற்றவர்கள் போன்ற அனைவரும் ஓரிடத்தில் தங்கவைக்கப்பட்டதால் அதிலிருந்து பிரச்சனைகள் உருவானது. அதைதவிர்க்க உதவி தேவைப்படுபவர்களை வகைப்படுத்தி, மிக வறியவர்களான முதியோர்கள், குழந்தைகள், ஊனமுற்றோரை இரவலர் இல்லங்களில் (ஏழையர் காப்பு மனை, வறியவர் விடுதி) சேர்த்தும், சிலருக்கு வீடு தேடிச் சென்று உதவிகள் வழங்கியும், வேலைக்குச் செல்ல விரும்பாத திடகாத்திரமானவர்களை மட்டும் வேலைக்கொட்டடியில் சேர்த்தும், வறியவர்களுக்கு வழங்கிய உதவிகளில் மேலும் மனிதத்தன்மையுடன் அரசுகள் செயல்பட ஆரம்பித்தது.
Community Work Experience Program (CWEP) - சமுதாயப் பணியில் அனுபவம் பெறுவதற்கான திட்டம் - இந்த திட்டத்தின்படி, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்தினர், நிரந்தரமாக நலத்திட்ட உதவிகளைச் சார்ந்திராமல், அவர்களுக்குப் பணி / தொழில் செய்யும் திறனை வளர்க்கும் அனுபவத்தை உருவாக்க வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. இதன்படி பயனாளிகள் பெரும் உதவியின் அளவைப் பொறுத்து, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணி நேரம் அரசு அல்லது தொண்டு நிறுவனங்களில் பணிப்பயிற்சி பெற வேண்டும். பணியில் காலம் தவறாமை, சக பணியாளர்களிடம் நல்லுறவு, வாடிக்கையாளர்களுடன் சுமுகமாகத் தொடர்பு கொள்ளல் போன்றவற்றில் திறனை வளர்த்து, தாங்களும் வேலை செய்து வருமானமீட்டவேண்டுமென்ற ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுவதற்கு இந்தப் பயிற்சி உதவுகிறது.

English

The proposal by various economists, social planners, and politicians to discourage able-bodied people from receiving welfare benefits. It would establish programs and facilities in the public and private sectors, so that these people could earn some of their benefits through work. It is a generic term rather than any specific program. See also workhouse.