workhouse
வேலைக் கொட்டடிகள்
தமிழ் விளக்கம்
18 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான நாடுகளில், உதவி தேவைப்படும் திடகாத்திரமான ஏழைகளுக்கு வேலைக் கொட்டடிகளில் வைத்து, வேலைவாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக உணவும் உறைவிடமும் தந்த நடைமுறை. அரசே வறியவர்களை தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைத்து, அவர்களின் வேலைக்கீடாக அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்க செய்துகொண்ட ஒப்பந்தம். இந்த நடைமுறையில், கைக்குழந்தைகள், சிறார்கள், முதியோர்கள், ஊனமுற்றோர்கள், நோய்வாய்ப்பட்டோர்கள் மற்றும் ஆரோக்கியமான திடகாத்திர உடல்வலுவைப் பெற்றவர்கள் போன்ற அனைவரும் ஓரிடத்தில் தங்கவைக்கப்பட்டதால் அதிலிருந்து பிரச்சனைகள் உருவானது. அதைதவிர்க்க உதவி தேவைப்படுபவர்களை வகைப்படுத்தி, மிக வறியவர்களான முதியோர்கள், குழந்தைகள், ஊனமுற்றோரை இரவலர் இல்லங்களில் (ஏழையர் காப்பு மனை, வறியவர் விடுதி) சேர்த்தும், சிலருக்கு வீடு தேடிச் சென்று உதவிகள் வழங்கியும், வேலைக்குச் செல்ல விரும்பாத திடகாத்திரமானவர்களை மட்டும் வேலைக்கொட்டடியில் சேர்த்தும், வறியவர்களுக்கு வழங்கிய உதவிகளில் மேலும் மனிதத்தன்மையுடன் அரசுகள் செயல்பட ஆரம்பித்தது.
பார்க்க: Almhouses - இரவலர் இல்லம், ஏழையர் காப்பு மனை, வறியவர் விடுதி - ஆதரவற்ற குடும்பங்களையும், மனிதர்களையும் சத்திரங்களிலோ, இல்லங்களிலோ வைத்துப் பராமரித்த / நிவாரணமளித்த கடந்த கால நடைமுறை. தற்போது இந்தமுறை வழக்கொழிந்து வறியவர்கள் வாழுமிடங்களிலே அவர்களுக்குத் தேவையான உதவியைப் பணமாகவோ, பொருளாகவோ பிற சேவையாகவோ வழங்குகிறார்கள்.

English
An indoor relief form of "assistance," common in various countries in the 18th century, in which poor people who received help had to live and work in special facilities. The government contracted with private individuals to feed and house these people in exchange for the work they could do. The programs, which housed infants, children, older and disabled people, and diseased as well as able-bodied adults, were phased out in the late 18th century in favor of slightly more humane almshouses and outdoor relief programs.