working class

உழைக்கும் வர்க்கம்

தமிழ் விளக்கம்

உலகில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என மூன்று வகுப்பினரைப் (வர்க்கத்தினரைப்) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினர் (வர்க்கத்தினர்) பற்றியே பேசுகிறார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார் . இவர்கள் தவிர வேறு பலரும் சமுதாயத்தை வகுப்புகளாகப் (வர்க்கங்களாக) பிரித்துள்ளார்கள். இவற்றுள் பொதுவாகக் காணப்படும் தன்மை என்னவெனில், இவர்கள் எல்லாருமே, வர்க்கப் பிரிவுகளுக்கான அடிப்படையாகச் செல்வத்தை ஏற்றுக் கொண்டதேயாகும். அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடி போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுப் பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் எனப் பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும். ஆங்கிலத்தில் இவர்களை working class, underclass என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு நிகராகத் தமிழிலும் உழைப்பாளிகள், விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு.

English

The socioeconomic class, according to many sociologists, whose family members tend to hold steady employment in industry and blue-collar jobs and who have relatively modest incomes, limited education, and aspirations and values that tend to be oriented toward maintaining security and preserving their existing lifestyles.