Working Time & Motion Study (WT& MS)
கால நிர்ணய வேலை அளவீடு முறை
தமிழ் விளக்கம்
ஒரு பணியாளர் செய்யப் பணிக்கப்பட்ட ஒரு வேலையை கூர்மையாகக் கவனித்து, அந்தப் பணியைச் சிறு கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு சிறு கூறுக்கும் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைக் கணக்கிட்டு, அதன் மூலம் ஒரு வேலையைச் செய்வதற்கு ஒரு சராசரி மனிதனுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைக் கண்டறியும் முறையினை டைலர் & கில்பர்த் (Frank Gilbreth & Dr. Lillian Gilbreth) என்ற நிர்வாகவியல் நிபுணத்துவம் பெற்ற தம்பதிகள் உருவாக்கினார். இதை கால நிர்ணய வேலை அளவீடு முறை (Time and Motion Study) என்பர். இதில் தேவையற்ற படிகள் மற்றும் செயல்பாடுகளைக் குறைப்பதால் செயல்திறனை அதிகப்படுவதாகக் கண்டறிந்ததால் இதை எல்லாப் பணித்தளங்களிலும் பின்பற்றினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்திலும், கால நிர்ணய வேலை அளவீடு முறை என்பது “பல்வேறு வகையிலான பணிகளை பல்வேறு காலநிலைகளில் அனைத்து வகையான மக்களையும் உள்ளடக்கிய ஒரு குழு செய்யும் வேலையைக் கணக்கிடும் முறை”. பெரும்பாலான மாநில அரசுகள், சராசரி ஊதிய விகிதத்தை நிர்ணயித்திட, கால நிர்ணய வேலை அளவீடு முறையைப் பின்பற்றுகிறது.
English
Time and Motion Study is a method for establishing employee productivity standards in which 1. A complex task is broken into small, simple steps, 2. The sequence of movements taken by the employee in performing those steps is carefully observed to detect and eliminate redundant or wasteful motion, and 3. Precise time taken for each correct movement is measured. From these measurements production and delivery times and prices can be computed and incentive schemes can be devised. Generally appropriate only for repetitive tasks, time and motion studies were pioneered by Frederick Winslow Taylor and developed by the husband and wife team of Frank Gilbreth and Dr.Lillian Gilbreth. This method is used in MGREGP in order to assess the time needed to complete a particular task and thereby to determine the wage rates