Works Progress Administration (WPA)
(பொதுப்) பணிகள் முன்னேற்றத்திற்கான நிர்வாகம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவில் 1930 களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தைச் சமாளிக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள், சட்டங்கள் போன்ற பலமுயற்சிகளைக் குறிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய புதிய ஒப்பந்தம் திட்டத்தின் வேலை வாய்ப்புப் பிரிவு. இந்த அமைப்பு ஹாரி ஹாப்கின்ஸ் (Harry Hopkins 1890- 1946) என்ற சமூகப்பணியாளரின் தலைமையில் 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 80 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது.. பூங்காக்கள், சாலைகள், விமான நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கவும், இசை, ஓவியக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்களை ஆதரிக்கவும் இந்த திட்டத்தின் கீழ் அரசு நிதி உதவி செய்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1943 இல் அமெரிக்கப் பொருளாதாரம் ஸ்திரமடைந்து வேலைவாய்ப்புகள் அதிகரித்த பிறகு இத்திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
English
A New Deal employment program established in 1935 under the leadership of social worker Harry Hopkins (1890- 1946), WPA provided jobs for more than 8 million people during its existence. Federal funds were used to build parks, bridges, roads, and airports and to sponsor the work of artists, musicians, writers, and scholars. The program was renamed the Work Projects Administration in 1939; it was disbanded in 1943 when employment conditions changed as a result of World War II.