World Bank
உலக வங்கி
தமிழ் விளக்கம்
உலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் முதன்மைக் குறிக்கோள் உலகிலுள்ள வறுமையைக் குறைப்பதாகும். வறுமையொழிப்பை நோக்கமாகக் கொண்டே வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம், முதலீட்டு நிதியை ஊக்குவித்தல் போன்ற செயல்களை வங்கி முன்னெடுக்கிறது.
உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (International Bank for Reconstruction and Development (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (International Development Association - IDA)ஆகிய இரண்டு அமைப்புகள் உலக வங்கியின் துணை நிறுவனங்களாகும்.
உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன: அவையாவன - பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation (IFC), பலதரப்பு முதலீட்டுப் பொறுப்புறுதி முகமை (Multilateral Investment Guarantee Agency MIGA), பன்னாட்டு முதலீட்டுப் பிணக்குகள் தீர்வு மையம் (International Centre for Settlement of Investment Disputes ICSID).
உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களைக் கொண்டுள்ளன.
தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் (International Monetary Fund (IMF) சேர்த்து உலக வங்கிக் குழுமம், 'பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்' (Bretton Woods) எனவும் அழைக்கப் பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்குப் பிறகு (1 - 22, ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

English
The informal name for the International Bank for Reconstruction and Development, headquartered in Washington, DC, with offices in every part of the world. The bank lends money and economic advice to developing countries. The World Bank was founded in 1944 to help the economies of war-torn nations.