World Food Programme
உலக உணவுத் திட்டம்
தமிழ் விளக்கம்
உலக உணவுத் திட்டம் (World Food Programme. WFP) என்பது பட்டினியைப் போக்கப் பாடுபடும் உலக அளவிலுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப்பெரும் மனிதநேயமிக்க அமைப்பாகும். 1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிதாய் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏறக்குறைய 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, உலக உணவுத்திட்டமானது, ஐக்கிய நாடுகள் சபையால், 1963 ஆம் ஆண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பரீட்சாத்தகரமாக ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான செயல்பாடுகளைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. இவ்வமைப்பானது 80 ற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில், வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும், 90 மில்லியன் மக்களுக்கும், பட்டினியில் வாடிவதங்கும் 56 மில்லியன் சிறுவர்களுக்கும் உலக உணவுத்திட்டத்தின் மூலம் உதவி வழங்கி வருகின்றது. உணவானது ஓரு மனிதனின் அடிப்படை உரிமை என்கின்ற கோட்பாட்டினடிப்படையில் உலக உணவுத்திட்டம் செயல்பட்டு வருகின்றது.
English
A subsidiary of the United Nations Food and Agriculture Organization (FAO) that obtains and provides emergency supplies of food for populations suffering famine or disaster; it also helps nations where such populations exist to receive and distribute food.