World Health Organization (WHO)
உலக சுகாதார அமைப்பு
தமிழ் விளக்கம்
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகள் சபையின் ஓரு அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. 7. 4.1948 ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் (League of nations) என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும். 'உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை அதிகத் தரமான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்'. தொற்று நோய்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதும், உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதும் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய வேலைத்திட்டமாகும். உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பத்திலிருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சட்டத்தை, உலகிலுள்ள 61 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையில் கையெழுத்திட்டன. உலக சுகாதார அமைப்பானது தொடக்கத்திலிருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது, நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதிலும் கவனம் செலுத்துகிறது. உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட் இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது. இதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் அஸ்லெப்பியசின் தடி ஏற்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு 147 நாடுகளில் இயங்குகிறது. இது சில உதவி அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம். ஆகியவற்றிற்காக இவை செயல்படுகின்றன. கேன்சர் தடுப்பிற்கான சர்வதேச ஆய்வு மையம் பிரான்சில் லியோன் நகரில் உள்ளது. சுகாதார மேம்பாட்டிற்கான மையம் ஜப்பானின் கோபே நகரில் உள்ளது. உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு அலுவலகம் இருக்கும். சில நாடுகளில் துணை அலுவலகங்களும் உள்ளன. இந்த அமைப்பிற்கான நாட்டின் பிரதிநிதி, அந்த நாட்டின் அலுவலகத் தலைவராக இருப்பார். உலக சுகாதார நிறுவனம் 147 நாடுகளில் 8,500 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

English
The United Nations agency established in its present form in 1948, with headquarters in Geneva, whose purpose is the "attainment by all peoples of the highest possible level of health". WHO sponsors medical research, health education, disease prevention programs, and the standardization of health and mental health statistics throughout the world.