worthy poor

தகுதியான ஏழைகள், யோக்கியமான ஏழைகள்

தமிழ் விளக்கம்

ஊனமுற்றதாலும், கணவன் அல்லது மனைவியை இழந்ததாலும், எதிர்பாராமல் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்ததாலும் ஏழைகள் ஆனவர்கள். இவர்கள் அடிப்படையில் நேர்மையானவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும், சொந்தக்காலில் நிற்க விரும்புபவர்களாகவும் கருதப்பட்டனர். யோக்கியமற்ற, உழைப்பில் ஆர்வமற்ற, சோம்பேறித்தனத்திற்கு ஆட்பட்டு வாழ்பவர்களிலிருந்து, உழைத்துப் பிழைக்க ஆர்வம் காட்டியவர்களைப் பிரித்தறிய 19 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடால். தற்போது அரசு சொற்பிரயோகத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படாவிட்டாலும், இந்த வார்த்தையின் கருத்து / பொருள் ஏழைகளைக் குற்றம் சொல்ல / பழி சுமத்தப் பயன்படுகிறது.
பார்க்க - unworthy poor - இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற, யோக்யதையில்லாத, உதவி பெறத் தகுதியற்ற ஏழை, அபாத்திரன், தராதரமற்ற (தரம்+அதரம்) ஏழை - வேலை செய்ய விருப்பமற்ற, சோம்பலான, பிறரால் ஏற்றுக்கொள்ள முடியாத நேர்மையற்ற நடத்தைகளால் வறுமைக்கு ஆட்பட்டவர்களை ஏளனமாகக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல். சுருக்கமாக உதவி பெறத் தகுதியற்ற ஏழைகள். வரியவர் சட்டம் அமலில் இருந்த கடந்த காலத்தில், அரசு உதவிக்கு தகுதி படைத்த (விதவைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், குழந்தைகள்) ஏழைகளைலிருந்து பிரித்தறிய உபயோகப்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். இப்பொழுது இந்த வார்த்தை அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படாவிட்டாலும், மனிதர்களின் இயலாமை எங்கெல்லாம் ஏளனத்துடன் பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வார்த்தையின் தாக்கம் இருக்கின்றது

English

The term once used to describe people who were poor because they were widowed, disabled, or had experienced unexpected economic reversals. They were considered to be honest, motivated to contribute, and basically hardworking. This term was used, mostly before the 20th century, to distinguish those people who "deserved" assistance from those who did not (the "unworthy poor"). Although the term is no longer officially used, many people still believe the concept. See also victim blaming.