Wyatt v. Stickney
வியாத் Vs சிக்னீ வழக்கு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் அலபாமா மாநில அரசு மனநல சேவைகளுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க, அதனால் அந்த மாநிலத்தின் பிறைஸ் மனநல மருத்துவ மனையில் ஆட்குறைப்பு செய்ய நேரிட்டது, பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள், போதுமான பணியாளர்கள் இல்லாததால், காரணமின்றி அங்கு மனநோயாளிகளாக அனுப்பப்பட்ட பலருக்கு, குறிப்பாக இளங்குற்றவாளிகளின் மனநலத்தை ஆட்குறைப்பு பாதிக்கும் என்று கூறி வழக்குத் தொடர்ந்தனர். ஏறக்குறைய 30 வருடங்கள் நடந்த இந்த வழக்கில் 1971 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாகச் சிகிச்சை அளிப்பது அரசின் கடமை என்று கூறியதால், அமெரிக்காவெங்கும் மனநல சிகிச்சையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
English
The 1971 legal ruling in Alabama declaring that patients with mental illness who are committed on civil grounds have the constitutional right to receive such individual treatment as will give them a realistic opportunity to be cured or to improve their mental condition. See also right to treatment and deinstitutionalization.