X chromosome
X குரோமோசோம்
தமிழ் விளக்கம்
உயிருள்ள ஒரு செல் என்பது, செல்சுவர், அதனை அடுத்து திரவ வடிவத்திலான சைட்டோபிளாசம், அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையப்பகுதியில் உட்கருவாகத் திகழும் நியூக்ளியஸ் ஆகிய முக்கிய பகுதிகளை அங்கங்களாகக் கொண்டுள்ளதாகும். மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று, செல் சுவாசிப்பதற்குத் துணை புரிவதாகும். இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ், ஒரு செல்லின் மிக மிக முக்கிய பகுதியாகும். இந்த உட்கரு இன்றி, ஒரு செல் தனது பயணத்தைத் தொடர முடியாது. இந்த நியூக்ளியற்குள் மிகச் சிறிய துணுக்குகளாக புரோட்டின்கள் உள்ளன. இது குரோமோசம் என்று கூறப்படும். ஒவ்வொரு செல்லினுளும் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமத்திற்குள் தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் இருக்கின்றன. அதனைச் சுருக்கமாக டி. என். ஏ. (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்று கூறுவர். இது முதன் முதலில், 1953 ம் ஆண்டு வாட்ஸன் (Watson), க்ரிக் (Crick) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த டி.என்.ஏ ஆய்வில் மேலும் பல அறிஞர்கள் ஈடுபட்ட போது வியக்கத்தக்க பல கோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளமுடிந்தது. வம்ச பரம்பரைச் செய்திகள், பின் வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒரு மனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் எனப் பல்வேறுபட்ட செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தித் தொகுப்புகளைத்தான் ஜீன் (gene) என்று குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு செல்லிலுமுள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடியானது வம்சப் பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. இது உடற்கூறு குரோமோசோம்கள் (Autosomes) எனப்படும். இந்த வகைக் குரோமோசோம்கள் தான் பிறக்கப் போகும் சிசுவின் உடல்கூறு இயல்புகளையும், அதன் இயக்கங்களையும், அதன் இயல்புகளையும் தீர்மானிக்கும். 23 வது ஜோடியானது பாலினத்தைத் (Sex) தீர்மானிக்கும் செய்தியினை உள்ளடக்கி இருக்கும். இதனைப் பாலினக் குரோமோசம் (Sex Chromosomes) என்று குறிப்பிடுகின்றனர். இதில் ஆண் உயிரணுவில் உள்ள 23 வது ஜோடியான இனக் குரோமோசம் X, Y என்றும், பெண் கருமுட்டையில் X, X என்றும் இருக்கும். Y என்பது ஆண் பாலைத் தீர்மானிக்கும், X பெண் பாலைத் தீர்மானிக்கும் குரோமோசம் ஆகும். இந்த 23 ஜோடி குரோமோசம்கள் முதிர்ச்சி அடையும் போது, இரண்டாகப் பிரிந்துவிடுகிறது. விந்தணுச் செல் இரண்டாகப் பிரியும் போது, 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசோம்), ஒரு X எனும் பெண் இனக் குரோமோசம் என்ற ஒரு பாதியாகவும், 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசம்), ஒரு Y எனும் ஆண் இனக் குரோமோசம் என்ற இன்னொரு பாதியாகவும் பிரிந்து விடும்.
English
One of the two human sex chromosomes, whose pairing (XX for females, XY for males) determines an individual's sex. See also Y chromosome.