xanthines

சாந்தீன், மலர்மஞ்சள் நிறமி வகை

தமிழ் விளக்கம்

மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி மனவெழுச்சியைத்தரும் ஒருவகை மருந்துகளின் தொகுப்பு. இது ஆம்பெடமைன்கள் மற்றும் கொக்கெயின் மருந்துகளின் குணங்களோடு தொடர்புடையது.
பார்க்க: amphetamine - தற்காலிகமாக மூலையைச் சுறுசுறுப்பாக்கி, களைப்பைப் போக்கும் மருந்து - மூளையின் புறப்பகுதிகளைத் தூண்டி, தற்காலிக விழிப்பு நிலையையும், பரவசநிலையையும், நன்னிலை உணர்வையும் தூண்டும் ஒரு மருந்துப்பொருள். சோர்வைப் போக்கவும், குழந்தைகளிடம் உள்ள படபடப்புத் தன்மையை மாற்றவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. மனவெழுச்சித் தூண்டிகள் என்றும், துருதிகள் என்றும் அழைக்கப்படும் இந்த மருந்தை நீண்ட நாள் பயன்படுத்தும்போது, அந்த மருந்தை உடல் படிப்படியாக ஏற்றுக்கொண்டு, இயல்பான மனவெழுச்சிக்குக் கூட அதிக அளவு மருந்து தேவைப்படும் நிலையை உருவாக்கும். இதனால் மிகு சோர்வும், மாரடைப்பும், மனச்சிதைவு நோயும் உண்டாகும். மரணம் கூட ஏற்படலாம்.
cocaine - கோகோயின், ஓரிடத்தில் இருக்கும் வலியுணர்ச்சியைப் போக்கும் மருந்து - கோகோயின் (Cocaine பென்சாயில் மெத்திலெகோனைன்) என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் தூள் வடிவத்தில் காணப்படும் வெண்மை நிறமுடைய ஒரு உப்பாகும் “கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான -ine என்பது சேர்ந்து கோகோயின் என்ற வார்த்தை உருவாகியது. இது மத்திய நரம்பு மண்டலத்தின் கிளர்ச்சியூட்டியாக இருப்பதுடன், பசி அடக்கியாகவும், நன்னிலையுணர்வு, ஆற்றல், உஷார்நிலை, நம்பிக்கை, உச்சபட்சமான உணர்திறனை அளிப்பதாகவும் உள்ளது. இது பல்வேறு முறைகளில், வாய்வழியாகவும், கோகோ இலைச் சாறாகவும், மூக்கு வழி உறிஞ்சியும், ஊசிவழியாக உட்செலுத்தியும், இன்ஹேலேஷன் (புகைஉறிஞ்சுதல்) மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளில், கோகோயின் பிரபலமான உற்சாக மருந்தாக இருக்கிறது. ஏறக்குறைய உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ப்பதோ, விநியோகம் செய்வதோ, மருத்துவம் சாராத நோக்கங்களுக்கோ அல்லது அரசு ஒப்புதலின்றி இதனை வைத்திருப்பதோ, சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், இதன் உபயோகம் சட்டவிரோதமானதாகவும் கடுமையான தண்டனைக்கு உரியதாகவும் இருந்த போதிலும், உலகளாவிய அளவில் இதன் பயன்பாடு பல்வேறு சமூக, கலாச்சார, தனிநபர் மற்றும் அந்தரங்க மட்டங்களில் பரந்துபட்டதாய் இருக்கிறது.

English

A group of drugs, related to amphetamines and cocaine, that act as central nervous system (CNS) stimulants; caffeine is a common example.