yellow fever

மஞ்சள் காய்ச்சல்

தமிழ் விளக்கம்

ஏடிஸ் ஏஜிப்தி வகைக் கொசுக்களால் பரப்பப்படும் வைரல் நோயே மஞ்சள் காய்ச்சல். இந்த வைரஸ் ஃப்ளேவிவைரஸ் வகையைச் சேர்ந்த ஓர் ஆர்.என்.ஏ. வைரஸ். ஆப்ரிக்காவின் சகாராப் பாலைவனத்தின் தென்பகுதி நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் கரிபியன் தீவுகளின் சில பாகங்களில் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. மஞ்சள் காய்ச்சலில் இருவடிவங்கள் உள்ளன: நகர்ப்புற மஞ்சள் காய்ச்சல் மற்றும் வன மஞ்சள் காய்ச்சல். மருத்துவ மற்றும் காரணவியல் அடிப்படையில் அவை இரண்டும் ஒன்றுதான். மனிதக் குடியிருப்பைச் சார்ந்து வீட்டுக்குள்ளும் வெளியிலும் இருக்கும் கொள்கலன்களில் (உ-ம். தண்ணீர்க் குடுவை, பீப்பாய்கள், டிரம்கள், டயர் அல்லது தகரப் பாத்திரங்கள்) இக் கொசு பெருகுகிறது. எங்கெல்லாம் ஏடிஸ் ஏஜிப்தி கொசுக்கள் அழிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சலும் மறைந்து விடுகிறது. மனிதர்களுக்குத் தடுப்புமருந்து அளிப்பதன் மூலமும், நோய்பரப்ப முடியாதபடி ஏடிஸ் ஏஜிப்தி வகைக் கொசுகளை அழித்தொழிப்பதன் மூலமும் நகர்ப்புற மஞ்சள் காய்ச்சலைத் தடுக்க முடியும். வன மஞ்சள் காய்ச்சல் உண்டாகும் ஆபத்தில் இருக்கும் மக்களுக்குத் தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் இதனை வெற்றிகரமாகத் தடுக்க முடியும்.
காய்ச்சல், குளிர் நடுக்கம், தலைவலி, குமட்டலும் வாந்தியும், முதுகு வலி உட்பட தசை வலி, பசியின்மை, போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், வயிற்று வலி, வாந்தி, கல்லீரல் சிதைந்து மஞ்சள் காமாலை ஏற்படுதல், சிறுநீரகம் செயலிழப்பு, வாய், மூக்கு, கண்கள் அல்லது வயிற்றில் இருந்து இரத்தம் கசிதல். தொடர்ந்து வாந்தியிலும் மலத்திலும் இரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றி உயிருக்கே ஆபத்தாக முடியும். தடுப்பூசியின் மூலம் மஞ்சள் காய்ச்சலைத் தடுக்கலாம். தோலுக்கடியில் செலுத்தப்படும் ஒரு வேளைத் தடுப்பு மருந்து 100% நோய்த்தடுப்பை அளிக்கிறது. தடுப்பூசி இட்டு 10 நாளைக்குப் பிறகே தடுப்பாற்றல் உருவாகும்.

English

An infectious disease caused by a virus transmitted by the bites of infected mosquitoes, found mostly in warm, damp climates. Symptoms include high fever, chills, jaundice, and often hemorrhaging and death. Prevention occurs through the control of mosquito habitats and through inoculations.